பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூலகர் ஒரு புலவர்

நூல் அறிவு விளக்கின் அகல்; நூல் தனிமைக்குத் தக்க நண்பன்; நூல் மணக்கவலைக்கு மருந்து நூல் உணர்வினுக்கு ஊட்ட உணவு, நூல் வியத்தகு விலை மகள்,

இவ்வாறே நூலின் விளக்கத்திற்கு மேலும் மேலும் தொடர் க்ளை அடுக்கலாம். சுருக்கம் கருதிப் பெருக்கவில்லை. இத் தொடர்கள் உண்மையான படப்பிடிப்புகளே. அத்துடன் பொருத்தமான விளக்கத்திற்கு விரிந்து கொடுப்பவை. ஆயினும் நூலை விலைமகளாகக் குறிக்கும் இறுதித்தொடர் நெஞ்சில் நிறையவில்லை; மனக்குறையைக்கிள்ளி விடுகிறது: அத்துணை மதிப்பாகத் தோன்றவில்லை என்று கூறத் தோன்றுவது இயல்பே. . . . .

விலைமகள் பெண்ணுலகத்துக் கோடரிக் காம்பு; ஆனுல குக்கு நச்சுப்புகை, மன்பதையின் புரையோட்டம். அத்தகு புலைமகளாம் விலைமகளை வாழ்வுக்கு வளந்தரும் நூலுக்குத் தொடர்புபடுத்துவதா என உள்ளம் மொணங்குவதும் இயல்பே. விலைமகள் மாந்தரினத்தினின்றும் ஒதுக்கப்பட்ட குப்பைதான். 'குப்பையிலே மலர் கொஞ்சும் குருக்கத்துக் கொடி வளராதோ? சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியோமா? இத் தொடர்களைக் கிண்டினால் எளிய மலர் ஏடவிழும்; அரிய முத்து அழகு கூட்டும்.

விலைமகளிர் மாந்தளிர் போலும் உடல் (முறிபுரை மேனி) மெருகு கொண்டு காண்போர் உள்ளத்தைக் கவர்பவர். எழில் வண்ண மேலட்டைகளால் இக்காலத்து நூல்களும், மஞ்ச