பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 95

லர். நூல்களைப் பேணும் பொறுப்பையும் கொண்டவர். நூலைப் பேணல் என்பது இருவகைப்படும். ஒன்று பழுதாகாமல் ஒம்பி பகுப்பிற்கேற்ப அமையுமாறு பேணுதல், மற்றொன்று - படிப்போர்தம் தகுதியறிந்து படித்தோர்தம் நூலறிவையும் முன் படிப்பையும் அறிந்து ஏற்ற கருத்துடைய நூல்களைப் பக்குவ மாக வழங்கி நூலின் குறிக்கோள் நிறைவேறும் பாங்கில் அதன் கருத்தைப் பேணுவது. இதற்கு நூலின்கருத்தை அறிந்திருக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு நூலும் நூலகத்திற் புகும்போதே நோட்டமிடப்படவேண்டும். இதனால் நூலகரும் நூல்களின் அறிவைப் பெற்றவராவார். இத்தகையவரும் ஒருவகைப் புல வரே, நாலடியார் அவரைப் போற்றும் புலவர்' என்கிறார்.

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியார் உய்த்தக மெல்லாம் நிறைப்பினும் மற்றவற்றைப் போற்றும் புலவரும் வேறே; பொருள் தெரிந்து தேற்றும் புலவரும் வேறு;

இந்தப் போற்றும் புலவர்களாம் நூலகர்கள் தேற்றும் புலவர்களை உருவாக்குபவர்கள். எனவே போற்றப்பட வேண் டிய புலவர்களுமாவர். இவர்கள் முகமலர்ச்சியால் வரவேற்கும் கலையறிந்தவர்கள். முறுவலால் பேசும் வித்தகர்கள். ஆர்வத் தால் நூற்பொருளை அறியும் திறனாளர்கள். நினைவால் ஒவ்வொரு நூலிலும் பதிந்த்வர்கள். ஒவ்வொரு நூலையும் தனது ஒவ்வொரு குழந்தையாகப் பேணுபவர்கள். இப்போற்றும் புலவர்களைப் போற்றிப் பாராட்ட வேண்டும். பாராட்டிச் சிறப்புச் செய்தல் தகும்.

போற்றும் புலவர் வாழ்க.

3. நாலடி - 3 18