பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 6! 55) 6/7 lug)

வைகறைப் போது தொடங்கியதும் விழித்து மரக் கலமேறிப் புகார் நோக்கிப் புறப்பட்டாள் அரசிளங்குமரி. சில ஏவலர் மட்டிலும் இங்கமைந்த பாடி வீடுகளில் தங்கினர். விடியலில் புகாரை அடைந்தோம். கடலாடும் கண் கொள்ளாக் காட்சியை யும், பிற விழா நிகழ்ச்சிகளையும் நாள் முழுதும கண்டோம். அங்கு வெளிநாட்டுப் பெரு மக்கட்கென அமைக்கப்பட்ட வள மனயில் தங்கினோம். மறுநாள் அங்கமைந்த இந்திர விகாரை' முதலிய பெயர் பெற்ற ஏழுபுத்தக் கோட்டங்களைக் கண்டு தொழுதும் சான்றோரது அறவுரை கேட்டும், வாழ்த்துப் பெற் றும் முற்பகலைக் கழித்தோம். பிற்பகல் மாலையில் இவ்விடம் நோக்கி மீளத் தொடங்கினோம். பீலிவளை கடற்கரைக் காட்சி யையும், கரையின் ஒரத்தில் அமைந்த சோலைகளின் வளமனை களின் அழகையும் கண்டவாறே தோழியுடன் கரையோரமாக டந்து வந்தாள். இவளைத் தொடர்ந்தவாறே மரக்கலம் ஒரளவில் ஒரமாகக் கடலில் வந்து கொண்டிருந்தது. புகார் நகரின் எல்லையைக் கடந்தோம். ஓர் உப்பளப் பகுதியில் வந்தோம், அதனை அடுத்து ஒரு பெரும் மணல்மேடு. அங்கு அழகான பூஞ்சோலை ஒன்று தென்பட்டது அச்சோலையில் புன்னை மரங்களில் இனிய பசுமை காண்போரை அழைத்தது. அங்கு மலர்ந்த மலர்களின் குளிர் நிறம், கிளர் மனம் ஏதோ ஒருவகை ஈர்ப்பு வலிமை கொண்டு ஈர்த்தன. அச் சோலையைக் கான அவாக் கொண்டாள் இளவரசி. கடற்பக்கம் கழுத் தொடித்து மரக்கலத்தை நிறுத்தி வைக்குமாறு குறி காட்டி னாள். அவளது முகத்தில் பூரிப்பின முதல் எல்லை. தென்பட்டது. இயற்கை எழிலில் புலன்கள் யாவற்றையும் ஊற்றினாள். பூரிப்பு நிழலாட்டம் போட்டது போன்று முகம் மலர்ந்தாள். சோலைகளிடையே ஒர் எழில்வாய்ந்த

薄 - - - - - - -

இவ்விகாரைகள் அசோகப் பெருமன்னனது இளவல் எனக் கருதப்படும்

மகேந்திரனாள் ஏறத்தாழ கி.மு. 260க்குப் பின் கட்டப்பட்டவை.

9 பின்னர் மகேந்திர விகாரை எனப்பட்டது. மகேந்திரனால் سان باناعة وه தையே இந்திரனாள் எடுக்கப்பட்டது என உரையாசிரியர் எழுதினர். மகேந்திர லும் இந்திரன் இருக்கிறா னன்றோ! -

9. 3 y : 10 : 14