பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 20

மன்னர் ஆண்டனர் என்பதற்குச் சான்றுகள் இன்றும் சொற்கு ளாக உள்ளன மேலைக் கோட்டை வாயில், வடக்குக் கோட்டை வாயில் என்னும் பெயர்கள் இன்றும் வழங்கப்படு கின்றன. இந்த எல்லைச் சொற்களை வைத்துக் காணும்போது பட்டினப்பாக்கத்தின் எல்லைகள் இவை என்பதையும் அப் பட்டினப்பாக்கத்தைச் சூழக் கோட்டை இருந்தது என்பதையும் அறியலாம் யானைகட்டி முடுக்கு என்னும் தெருப்பெயர் அரசு யானையின் உறையுளைக் குறிப்பதாகலாம். மருத்துக் கொத் தளத் தெரு என்பது போர்க்குரிய வெடிமருந்துகள் உருவாக்கப் படும் இடத்தின் குறிப்பாகலாம். நாணயக்காரர் தெரு என்பது நாணய வார்ப்பு அல்லது நாணயமாற்று நடந்த பகுதியாகலாம். எனவே நீ பெருங்குறைபடத் வேண்டியதில்லை' என்றேன்.

முடிவுரையாக வளையல் துண்டு இதுவரை யான் கூறியவை நாகர்பட்டினம் உருவான வரலாறு. 'நாகர்பட்டினம்-நாக பட்டினம்’ எனப்பெயா பெற்றதன் மூலக் கருத்துகள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையிலான வரலாறு இது. இதற்குமேல் வணிக வரலாறு நீண்டது. புத்தமதப் பெருக்க வரலாறு குறிப்பிடத்தக்கது. பிற மதக் கோவில்கள் எழுந்த வரலாறு செம்மையானது. சைவ வைணவச் சான்றோர் பாடிய வரலாறு பாடல்களாக உள்ளது. மேலை நாட்டார் வருகை அடுத்த வரலாறு. நில மாற்றங்கள், இயற்கை மாற்றங் கள். தொழில் மாற்றங்கள், இன மாற்றங்கள், இருப்பிட மாற்றங்கள், பல சுவையான செய்திகளைத் தருவன. அவற்றி னைச் சான்றோர் வாய்க்கேட்டும், கல்வெட்டு, பட்டயம், இலக்கிய இலக்கண நூல்கள், செவிவழிச் செய்திகள், நாட்டுப் பாடல்கள் முதலியவற்றை முனைந்து அறிந்தும் நீ நல்ல வரலாற்றை உருவாக்குவாயானால் இந்தப் பழைமையான நகருக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்தவன் ஆவாய்.

வாழ்க நாகர்பட்டினம் என்று சங்கு வளையல் துண்டு முடித்தது.

அதன் விருப்பப்படியே அதனைக் கடற்கரையிலே விட்டுப் பிரியா விடைபெற்றேன்.

(இக் கட்டுரையில் வளையல் துண்டு கற்பனை. பிற யாவும் சான்றுகள் கொண்டவை.)