பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 வளையல்

இவ்வறக் கட்டளையின் பொருட்செல்வம் என்ன ஆயிற்று என்பதற்குத் தடங்களைக்கூடக் காணமுடியவில்லை. அறக் கட்டளை கல்லெழுத்தாய் உள்ளது: அறம் நீரெழுத்தாய்ப் போயிற்று. கல்வெட்டு இருக்கிறது; அறப்பொருள் இல்லை. தோல்சிதையாமல் இருக்கிறது; சுளை இல்லை. விழுங்கியவர் எவரோ?

இதுபோன்று கடவுளுக்கென்றும் மக்களுக்கென்றும் வழங் கப்பட்ட எத்துணையோ விளைநிலங்கள், பொன்னணிகள், முத்துமணிகள், தட்டுமுட்டுப் பொருள்கள் பெரும் மதிப் புடையன சென்ற சுவடு தெரியாமல் போயின.

அறச்செயல் ஆறுமுனை.

மன்னரோ மற்றவரோ அறஞ்செய்ய எண்ணினர். நிலத்தை, பொருளை ஒதுக்கினர். அறத்தைக் கட்டளையாக்கி னர். அவையில் ஆணையிட்டனர். ஆணையைக் கேட்டு எழுதும் தலைமை ஒலை எழுத்தர் ஏட்டில் எழுதினர். ஏட்டெழுத்து அழியுமே என்று செப்புத் தகட்டில் பொறித்தனர். செப்புப் பட்டயமும் தப்பித் தவறுமே என்றும், கைப்படு கயவரால் காணாமற் போகுமே என்றும் கருதினர். அழியாமல் கல்லில் வெட்டினர். பலரும் காணும் பாங்கில் கோவில் சுற்றுச் சுவர் களில் பதித்தனர். , -

இவ்வாறு பொறிக்கும் நோக்கம், மன்னனது வீரமும் வெற் றியும், அறமுங் கொடையும், பெயரும் புகழும் காலமெல்லாம் தெரியவேண்டும் என்பது மட்டும் அன்று; அவ்வறம் தொடர்ந்து நிகழவேண்டும்; அவ்வாறு ஒர் அறம் உளது என்பதை இறையன் பர்கள் காலமெல்லாம் அறிய வேண்டும்; அதன் அறக்காப்பை மேற்கொண்டோர் அஃதுணர்ந்து தொடர்ந்து பேண வேண்டும்; இக் கல்வெட்டில் குறிக்கப்பட்ட அறத்தை நாம் செய்கின் றோம் என்று செய்பவர் மகிழ வேண்டும்; இவற்றுடன்: 'இவ்வறத்தைச் செய்யாமற் போனால் பழி நேரும், பொது மக்கள் தூற்றுவர்' எனும் அச்சமும் இருக்க வேண்டும் என் னும் கருத்துக்களையும் உள்ளடக்கியதே கல்வெட்டு அமைப்பு.