பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 புதையலும்

தமிழர் தமக்கெனத் தனித்தன்மையாகக் கொண்ட பொருள் இலக்கண அமைப்பில் இவ்வாறு அகம், புறம் இரண்டிலும் முரு கனது வாழ்வியல் மேம்பட்டுத் திகழ்ந்தது. முருகன் தமிழ் நிலத்து மாந்தனாகப் பிறந்து, மேம்பட்டு வாழ்ந்து, குரிசிலாகி, கிழவனாகி வாழ்வில் நிறைந்து தெய்வமானான். தமிழ்ப் பாங் கில் அவனது வாழ்வு திகழ்ந்ததால் முருகன் "தமிழ்த் தெய்வம் எனப்பட்டான்.

தெய்வமான முருகனால் 'முருகு' என்னுஞ்சொல்லும் தெய் இத் தன்மைச் சொல்லாயிற்று.

ஒரு சிற்பி, அழகிய பெண் சிலை ஒன்றை வடித்தான். வரி களால் அதற்கு ஒப்பனை புனைந்தான். அச்சிலை கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது. அச்சிலையைக் கண்டவர் சொல்ல இயலாத ஒர் உணர்வைப் பெற்றனர். அத்துணை மெருகோடும் தனிக் கவர்ச்சியோடும் அச்சிலை விளங்கிற்று. மாங்குடி மருத னார் என்னும் தமிழ் அறிஞர் அச்சிலையைக் கண்டார்; தன் னிலை மறந்து நின்றார். தம்மைக் கவர்ந்த அச்சிலையின் தன்மை அவருக்குத் தெய்வத் தன்மையாகத் தெரிந்தது. தெய் வத் தன்மையோடு இயன்ற சிலை என்று பாட எண்ணினார்:

வல்லோன் தைஇய வரிபுனை பாவை

முருகு இயன்றன்ன'-என்று தெய்வத் தன்மையைக் குறிக்க முருகு' என்னுஞ்சொல்லை அமைத்தார். முருகு' என்னுஞ்சொற்குத் தெய்வத் தன்மை' என்னும் பொருள் தோன்றியதைப் புலப்படுத்தினார். பிற இலக்கியங்களிலும் இப் பொருளைக் காணலாம்.

பொதுமக்கள் மரபுகளின் வளர்ச்சியால், சான்றோர், தெய் வம் என மேம்பட்டனர். குறள் குறித்தமைபோன்று வாழ்வாங்கு வாழ்ந்த சான்றோர் தெய்வமாயினர். பொருள் இலக்கணத்தில் கருப்பொருளைக் குறிக்கும் நூற்பா, 'தெய்வம் உணா' என்று தெய்வம் என்னுஞ் சொல்லைக் கொண்டு குறிப்பதும்

18. மதுரை 723, 7 24. 19. தொல் : பொருள் : 20