பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிச் செருகலும் திருகலும்

ឃុំត្រូម៉ា

திருமரைக்காடு என்று எழுதினால் ரகரம் தவறாக உள்ளது என்பர் புலவர். திருமறைக்காடு என்றால் புரிந்து கொள்வோரும் மிகப் பலர். -

மறை-வேதம்; காடு-ஆரணியம் என வேதாரணியம் பிறந்தது. தேவார மூவரும் மறைக்காடு என்றே பாடினர். அவர்க்கு முன்னர் வேதாரணியம் இல்லை. பின்னர்தான் அதன் வடமொழி பெயர்ப்பாக வேதாரணியம் முளைத்தது. ஆனால், வேதாரணி பத்தைத்தான் தமிழில் மறைக்காடு’ என்று சொல்வதாகக் கருதும் தமிழர் மிக மிகப் பலர்.

மறைக்காடு (வேதாரணியம்) எனப் பெயர் பெற்றது

- எவ்வாறு? மறை சிவபெருமானை வழிபட்டதால் அப்பெயர்

வந்தது என்றனர்.

  1. அவ்வாறாயின் மறை வழிபட்டது காட்டையர்? காட்டொடு

பொருந்திய ஊரகத்தே அமர்ந்த சிவபெருமானையா? கோவிலில் அமர்ந்த சிவனைத்தான் மறை வழிபட்டது. கோவிலிருந்தால் குடி உண்டு குடியிருந்தால் ஊருண்டு. மறை வழிபடுவதற்கு முன்னர் ஊர் இருந்தது. அவ்வூர்க்கு ஒரு பெயர் இருந்திருக்கு மன்றோ? அப்பெயர் யாது?

அதுதான் மறைக்காடு. மரைக்காடு என்றால் ....... f

1. ஞ்ான தே: பறை, 12