பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் | 9

நகர நம்பியர் திரியும் கடைத்தெருவில் விற்பதுபோல் நிறுத்தி னாள். மாலையை விலைக்குப் பெறுபவன் மாதவியை அடைய லாம் - என அறிவித்தாள். கோவலன் பெற்றான்; கவர்ச்சிக் கன்னி மாதவியை அடைந்தான். அவளை விடுதல் அறியா விருப்பினன்' ' ஆயினன். ஆகி, வடு நீங்கு சிறப்பிற்றன்' மனை (கண்ணகி) யகம் மறந்தனன், ' இது சிலம்பு வரலாறு. இவ்வரலாறு ப்ோன்றே மொழிச்செருகல் வரலாறும் அமைந்தது.

கோவலன் - தமிழர்

மாதவி - வடமொழி

கண்ணகி - தாய்மொழி சித்திராபதி - மாதவியைச் செருகியவள்

மாதவியாம் வடமொழியை ஏற்றுக் கண்ணகியாம் தாய் மொழியை மறந்தனர் தமிழர்.

இவ்வாறு கூறுவதால் வடமொழி தாழ்ந்தது என்பது கருத்தன்று. மாத வி தாழ்ந்தவள் அல்லளே: கலையரசி; கற்புடைய கலையரசி; வடமொழியும் கலைமொழிதான்; இலக்கியக் கலைமொழிதான். உலகளவில் சிறப்புடைய மொழி தான். இங்கே மற்றைத் தாய்மொழியில் செருகிய செயலைத் தான் நோக்குகின்றோம்; குற்றம் என்கின்றோம். சிலம்புப்படி குற்றத்திற்குரியவர் யார்? பரிச மாலையைக் கடைவீதியில் விலை கூறிக் கோவலனுக்கு வலைபோட்ட சித்திராபதி பரத்தைத் தொழிலில் கைவந்தவள். சித்திராபதி கோவலன் குடும்பத்தில் செருகிய செருகல் கண்டனத்திற்குரியது அன்றோ? அவளது செருகல் சோழ மன்னனுக்கு அடுத்த தகுதியில் வாழ்ந்த பெருவணிகர் குடும்பத்தை உருவ வைத்துவிட்டதே, அக்குடும்பம் உருக்குலைந்து போயிற்றே, மொழிச் சித்திராபதிகளின் செருக லும் உலக முதன் மொழி எனத் தக்க செந்தமிழ்க் குடும்பத்தை யும் உருவிவிட்டதே'

  • 1 . சிலம்பு : கால் : 174

z z - ? so

4 2.