பேழையும் 25
வடமொழி என்றும் பலர் கருதுவர். இக்கருதல், மூலத்தாயை மறுத்துவிடும் போக்கு எனலாம். -
இவ்வகையில், போலியாகும் வழக்கு எத்தகுதி கொண்டது? அதன் தகுதியைப் பின் வரும் வழக்குகள் கொண்டு அறியலாம்:
குசவன் வீட்டு முசக்குட்டி புசல் அடித்ததில் மசங்கிற்று - இவ்வாறு பேசுவோரை ஏளனப் பார்வையில் வைப்போமன்றோ? பேச்சு நகைப்பிற்கு உரியதாகிவிடும். இதுபோன்ற வழக்கை இழிசினர் வழக்கு", என்பர். -
இதுகொண்டு கலசம் என்பது இழிசினர் வழக்கு என் றால் அப்படிச் சொல்வது ஆன்மிகக் குற்றம் என்பதற்கு உறுதி யாகிவிடும். இந்த அளவில் சொற்போவி சிறப்பைப் பெற்றுள் ளது. மொழித்துறையில் இந்நிலை ஒருபுறமிருக்க, அடுத்தொரு நிலை இங்கு நினைக்கத்தகும் தொடர்புகொண்டது ஆகின்றது.
காண்பதற்கு உரியது காட்சி, (காண்-சி) மாண்புக்கு உரியது மாட்சி, (மாண்-சி) வெட்டிப் பிரிக்கப்படுவது வேட்டி: முட்டிக்கொண்டிருப்பது முட்டி. இவற்றைக்
காகஷி மாகதி வேஷ்டி முஷ்டி - என எழுத்து மாற்றி எழுதினர். அறி யாதார் இவை வடசொற்கள்; வடசொற்கள்தாம் தமிழில் காட்சி மாட்சி என ஆயின என்று எண்ணினர்.
மொழிச் செருகலில் இஃதொரு எழுத்துமாற்ற வேலை முன்னர்க் கண்ட கலயம்-கலசம் இயற்கையாக
நேர்ந்தது; பின்னது, செயற்கை வேலை; உள்நோக்கங்கொண்டது; o g கீழறுப்பு வேலை. ஆவும்; ஆனும்
மொழிப்போக்கில் இவ்வாறெல்லாம் பார்க்கவேண்டிய தில்லை; நிகழக்கூடியனவே என்றொரு அமைதி எண்ணம் எழ
8・ தொல் : பொருள் : 649 பேரா. உரை,