பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - புதையலும்

செய்யுள் நடையிற் சிறந்து விளங்கும் தமிழ்மொழிக்கண்ணே செய்யுளுக்கின்றியமையாத பொருள், யாப்பிலக்கணங்கள் பிறதொரு பாசையிலிருந்து கொள்ளப் பெறாது தமிழுக்குரிய வாய்த் தனியே இருக்கும் பொழுது அவற்றினோடொத்த அணியிலக்கணப்பகுதி மட்டும் அன்னிய பாசையிலிருந்து வந்த தாகச் சொல்லுவது அநாதரிக்கத்தக்கதே'

-என்று மறுத்து எதிர்க்குரல் கொடுத்தார்.

காலங்காலமாக இவ்வாறு எழுத்துச் செருகல், சொல் ஊடுருவல் கருத்துப் புரையோட்டம் தொடர்ந்து, பையப்பைய நிகழ்ந்து வருகின்றது. தமிழரில் இதன் உள் நோக்கை அறியா தவர் ஒத்து ஊதியும், தாளமிட்டும் வந்துளர். அள்ளித் தெளித்தாற்போல ஆங்காங்கு எதிர்ப்பும் மறுப்பும் எழுதுவதும் மறைவதுமாகவும் நிகழ்ந்தன.

இவற்றால் எத்துணையோ பொருள் பொதிந்த தமிழ்ச் சொற்கள் மறைந்தன. பொருள் பொருந்தாத வடசொற்கள் மலிந்தன. 'ஏழில்மலை' என்பது எலிமலையாகி முசிக பர் வதம்’ என வடமொழியாகி அதற்கொரு புதுப் புராணம் எழுந்த ஒரு சான்றே போதுமானது. தேவார மூவரால் பாடப் பட்ட திருக்கோவில்கள் உள்ள ஊர்களின் தனித் தமிழ்ப்பெயர்

கள் இன்று எவ்வாறுள்ளன?

சைவப்பெருமக்களே மறைக்காட்டுறை மைந்தா' என்று பாடிக்கொண்டு வேதாரணியம் செல்கின்றேன்' என்கின்றனரே. எத்துணை ஊர்ப்பெயர்கள் மாறியுள்ளன? தமிழர்களது இப் பாராமுகப் போக்கையும், பெருந்தன்மையையும், பெருமளவு மந்தத்தையும் பயன்படுத் திக்கொண்டு எல்லாமே வடமொழி யிலிருந்து வந்தன என்றும் எழுதினர்; பேசினர்; நிலைநாட்ட முனைந்தனர்; இன்றும் முனைந்துள்ளனர். -

தமிழ் நூல்களில் சில போக மற்றெல்லாம் வடமொழியிலி ருந்து வந்தன என்றனர். திருத்தொண்டர் புராணத்திற்கே

12. நற் : 391 : 7 18. ஞான. தே : மறை 2