32 - . . புதையலும்
சிவம் தமிழ் அன்றாம்!
தற்போது பழங்குரல் ஒன்று புதுப்பிக்கப்படுகின்றது. 'சிவம் தமிழ் அன்று: சைவம் என்று சொல்லத் தொல் காப்பியத்தில் விதி இல்லை, - அண்மையில் சென் னையில் எழுந்த புழுதியாம் இது.
"தமிழ் சிவம் இனிமை என்னும் தனிப்பொருள தாம்’ என்பது கழாரம்பரது பேரிசை நூற்பா. இதற்கு மறுப்புபோலும் தற்போது எழுந்துள்ள முனகல். .
எதில் எதிலோ வைக்கப்பட்ட வாய் சிவத்தின் மேலேயே வைக்கப்பட்டுள்ளது. மொழியியல்படி சுருக்கமாகச் சொன்னால், - ‘. . . . -
சுல்-என்பதன் வேரிலிருந்து சுள்-செல்-சேல்-சேள்-செள் செய்-சேய்-செம்-செவ்-செவ. சிவ.சிவம் வளர்ச்சியுறறதை மொழி ஞாயிறு பாவாணர் நிலைநாட்டியுள்ளார்கள்' பாவாணர் அவர்கள் சைவம் என்பதைத் திரிபாகுபெயர் என்றும் குறித்தார்.
'தவ' என்னும் உரிச்சொல் 'தவம் ஆனதுபோன்று,
'சிவ, சிவம் ஆயிற்று.
செம்மை, செந்நிறம் என்னும் பொருட்பாங்கைக் கொண்ட சொல் சிவம். திப்போலும் செம்மை வண்ணத்தன்' எனச் சிவபெருமான் குறிக்கப்பட்டார்.
உலகில் ஒருகால் சைவக்கொள்கை பரவியிருந்தபோது அங்கெல்லாம் சிவன்,சிவப்பன்' என்னும் பொருளிலேயே கொள்
எப்பட்டார். பிலிப்பைன்சு நாட்டார் சிவனைச் 'சிவப்பன்' எனப்பொருள்தரும் சொல்லிலேயே வழிபட்டனர்.
வடமொழியில் நல்ல மங்கலமான", எனப்பொருள்படும் அடைமொழியாகிய சிவ’ என்பதைக் காட்டுவர். வடமொழியில் 'சிவ' என்னும் ஒலி தமிழ் ஒலிக்கு மாறுபட்டது. மற்றொரு
6. தமிழர் பதம் : பக், 38, 39