பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு - 41

'குழலும் குடுமியென் பாலகன் கூறும் மழலைவாய்க் கட்டுரை யால்’’

-என்பது ஐந்திணை ஐம்பது. இதனில் கட்டுரை இனிய மழலைப் பேச்சைக் குறித்து நிற்கின்றது.

'தமக்குற்ற கட்டுரையும் தம்மிற் பெரியார் உரைத்தற் குற்ற உரையும் அஃதன்றிப் பிறர்க்குற்ற கட்டுரையும் சொல்லற்க; சொல்லின் வடுக்குற்ற மாகி விடும்.” r

என்னும் ஆசாரக்கோவைப் பாடலில் வரும் கட்டுரை என்னும் சொல் பேசுவதைக் குறிப்பது. அதனைச் சொல்லற்க என்னும் சொல் சொல்லிக்கொண்டுள்ளது.

“கல்லாத வரிடைக் கட்டுரையின் மிக்கதோர் பொல்லாத தில்லை ஒருவற்கு'

என்னும் பழமொழிப் பாடல் அறிவுரையாகப் பேசப்படு வதைக் "கட்டுரை' எனக் குறிக்கின்றது. அதே பழமொழி. 'கல்வி அகலமும் கட்டுரை வாய்பாடும் கொல்சின வேந்தன் அவைகாட்டும்'

என்று குறிக்கின்றது. அரசன் அவை கட்டுரையைக் காட்டும் என்பதால் கட்டுரை அவையில் பேசப்படுவதைக் குறித்துச் சொற்பொழிவைக் குறிப்பதாகின்றது.

“காயக் கரணமும் கண்ணிய துணர்த்தும்

கட்டுரை வகையும்' என்னும் மணிமேகலை அடிகளில் கட்டுரை தான் திட்டமிட்டுக் கொண்டதை மற்ற்வருக்கு விளக்கி உணரவைக்கும் பேச்சைக்

குறிப்பதாக உள்ளது. இந்நூல் புத்தன் கூறிய பொருள் பொதிந்த உரைப்பேச்சை х

8. தொல்-பொருள் - 428

9. ஐம் - 25 10. ஆசா, கோ - 67