பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 49

பற்றுக் கோடானவன்' என்று குறித்தார். 'ஆசு ஆகு எந்தை' என்பது அவரது பாட்டு. இதில் 'ஆசு’ என்னும் சொல் பற்றுக்கோடு, என்னும் பொருளைக் காட்டுகின்றது.

கல்வி அறிவிற்கும், வாழ்வியற் கருத்திற்கும் பற்றுக்கோடு ஆனவன் என்னும் பொருளில் ஆசு + ஆன் = ஆசான் ஆனான். ஒர் உலோகத்துடன் மற்றொரு உலோகத்தைப் பற்ற வைக்க பொருத்த, இடையே நிற்கும் உலோகத் தூள் 'ஆசு’ - பற்றாசு’ எனப்படும். இதுபோன்று கல்வியோடு மாணவரது உள்ளத்தைப் பற்றவைத்து அறிவொளி தருபவர் என்னும் கருத்திலும் ஆசான் என்னும் சொல் எழுந்தது. உலோகங்களை இணைக்க இடையில் நிற்கும் பற்றாசு தன் நலம் என்பதைக் கருதாது நிற்கும். அது போன்றே ஆசானும் தன் இன்பம் வேண்டாதவனாக இருக்க வேண்டும் என்பதை,

'ஆண் ஆக்கம் (இன்பப்புணர்ச்சி) வேண்டாதான் ஆசான்’ என்னும் சிறுபஞ்சமூலப் பாடல் நினைவுறுத்துகின்றது.

ஆசான் கல்வி கேள்விகளிற் சிறந்தவன் என்பது மட்டுமன்று, இரண்டிற்கும் உரிமை படைத்தவன். 'கேள்வியிற் கிளந்த ஆசான் உரையும்' என்னும் பரிபாடல் அடி கேள்விஅறிவை வழங்குவதற்கு உரிமை படைத்தவனாக எடுத்துமொழியப் படுவன்' எனக் காட்டுகின்றது.

தண்டமிழ் ஆசான் சாத்தன்,

மதுரை வேளாசான் - என்னும் புலவர்களது புலமையும் அறிவு நுணுக்கமும், அறிவுத் திறனும் ஆசான்' என்னும் சொற் பொருளுக்குப் பெருமைசான்ற இலக்கியங்களாகின்றன. துணுக்கமானவன் என்னும் கருத்திலும் ஆசான் பெயர் வழங்கப் பட்டுள்ளது.

அரசனுக்குக் சருத்துரை வழங்கும் கழு அரசியலுக்குப்

4. புறம் : 235 : 16

5. சிறுபஞ் : 29 : . հ. սf : 2 6 1