பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5c - வளையல்

பற்றுக்கோடாகத்;திகழ்ந்தது. அந்த ஐம்பெருங்குழுவில் ஒருவன் ஆசான். ' -

ஏட்டுக் கல்விக்கு மட்டுமன்றி இசை, கூத்து முதலிய கலை, களுக்கு அறிவுத் தந்தையாக ஆசான் விளங்கினான் என்பதை, 'ஆடற்கமைந்த ஆசான்', 'தலைக்கோலாசான்' என்னும் சிலம்புத் தொடர்கள் காட்டுகின்றன.

ஆசிரியன்

ஆசிரியன்' என்னும் சொல்லும் ஆசு + இரியன்' என இரு சொற்களின் கூட்டு. இங்கு 'ஆசு என்பது குற்றம் என்னும் பொருள் கொண்டது. ஆசு சிறுமையும் குற்றமும் ஆகும்' என்பது திவாகர நிகண்டு. இரியன் - கலைந்து ஓடச் செய்பவன். மனக் குற்றத்தை - அறியாமைக் கசட்டை, கலைந்து. சிதறி. இரிந்து ஓடச் செய்பவன் என்னும் பொருளில் நிறைந்தவன் ஆசிரியன். கல்வி என்பது அறியாமை என்னும் கசட்டை அறுப்பது அன்றோ? எனவே, கசடு அறுத்துக் கல்வி தருபவன் ஆசிரியன் ஆனான். 'கசடு அறக் கற்க’’ என்னும் குறள் 9 தொடரும் இக் கருத்தை வழிமொழிகின்றது.

தொல்காப்பியர் தம் நூலில் ஆசிரியர் என்னும் சொல் லையே கைக்கொண்டார். வரைநிலையின்றே ஆசிரியர்க்க: 19 மற்றும் கடிநிலை யின்றே ஆசிரி யர்க்க” " என்னும் நூற்பா அடிகளில் 'வரைநிலை', 'கடிநிலை” என நீக்குதல், கடிதல் என்னும் குற்றத் தொடர்புடைய சொற்களை அமைத்து "ஆசிரியன் குற்றம் நீக்கும் குறிப்டை வைத்தார்.

ஆசிரியர் குற்றம் நீக்கி நெறிப்படுத்துவதில் தலைமை ஆணையராக விளங்கியவர். பலவகைக் கேள்வித் துறையிலும் நிறைந்தவராக விளங்கி,

7. சிலம்பு : 3 : 1.26

8. 3 * : 3 x 25 30 : 30 9. குறள் , 391 10. தொல். எழு : 316 : 3

I . to 3 * * : 390 : 3