பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ந்துதலும் ஊட்டமும் (ஆய்வாசிரியரின் உணர்ஞரை} வணங்கி மகிழ்கின்றேன். "தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்பது பாவேந்தர் பாரதி தாசனாரின் உயிர் வடிப்பு. இவ்வடிப்பில் "எங்கள்" என்ற குழு லிற்குள் எத்துணைப் பேர் வருவரோ? உண்மையாக, ஓரளவில் கண்டால் தமிழ் கூறும் உலக வளாகத்தில் இங்கொருவர் அங் கொருவர் என அள்ளித் தெளித்த நிலையே தென்படுகின்றது. "தமிழ் என் அறிவினில் உறைதல் கண்டீர்” - என்பது பாவேந்தரின் அறிவு வடிப்பு. இவ்வடிப்பில் ஊன்றி நீற்கும் தமிழறிஞர் எண்ணிக்கை வேண்டும் அளவில் உள்ளதா என்பதில் ஐயம் தலை நீட்டுகிறது. "உணர்வை வளர்ப்பது தமிழே" என்பதற்கு ஈடுகொடுப்பவர் உளர் - ஓரளவில் உளர். இந்த ஓரளவையே தமிழ் வெறிக்குள் அடக்கிப் பார்ப்போர் எண்ணிக்கை பெருமளவு. 'தமிழ் வெறி' என்று ஒன்றும் இவ்லை: வேண்டியதும் இல்லை. தமிழ் தெறி வேண்டாமா? 'தமிழ்ப் பற்று' இருக்க வேண்டியதே. அதைக்கூட எதிர் கொள்ளாதவர்கள் தமிழ்ப் பண்பாட்டை உணர வேண்டாமா? கீழ்வரி எல்லையாத் 'தமிழ் நினைவு' இருந்தாலே போதும் என்று எதிர்பார்க்க வேண்டிய நிலை தற்போது உள்ளது. அந்த நினைவையும் மறந்தோரைப் பிறமொழி ஆட்டத்தில், அரசியல் ஓட்டத்தில் காண்கின்றோல் 5