பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 வளையல்

உபாத்தியாயன், குரு, தேசிகன்

இம்மூன்று சொற்களும் வட சொற்கள். ஆசிரியன் என்னும் கருத்தில் தமிழில் புகுத்தப்பட்ட சொற்கள். ஆனால், இச்சொற் கள் விரிக்கும் பொருள்கள் ஆசிரியன் என்பதற்கு நேரானவை அல்ல. இவற்றில் முதலில் புகுந்தது உபாத்தியாயன்' என்னும் சொல். அஃது உவாத்தியான் என மருவித் தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றது.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் காலத்தாற் பிற்பட்ட ஆசாரக் கோவையின் -

'அரசன் உவாத்தியான் தாய்தந்தை தம்முன் நிகரில் குரவர் இவர் ஐவர்

-என்னும் பாடலில் முதன் முதலாக இச்சொல் அறிமுகமாகின்றது.

அத்தியயநம் என்பதற்கு வேதத்தை - மறையை ஒதுதல் என்று பொருள். உப என்பதை வடமொழி இலக்கணம் உபசருக்கம் அஃதாவது அடைமொழி என்று குறிக்கும். அதற்கு இங்கே துணை' என்றுபொருள். எனவே, உப அத்தியயநன் . உய அத்தியாயன், உபாத்தியாயன். மறையை ஒதத் துணைபுரிபவன் என்னும் பொருளைக் கொண்டது. மறையை ஒதுவிப்பவனைச் குறிப்பதே இச்சொல் என்பதை மணிமேகலை விளக்குகின்றது.

ஆரண (மறை) உவாத்தி அபஞ்சிகன் என்போன்' 'ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியான்' 'அந்தண உவாத்தியை’’’

- என்னும் மணிமேகலை அடிகளில் ஆரணம், அந்தணன் என்னும் சொற்கள் நின்று மறை ஒதுவித்தலைக் காட்டிக் கொடுக்கின்றன. உவாத்தி என மரூஉ மொழியாகக் கூனிக் குறுகிக் காட்சியளிப்பதையும் காண்கிறோம்.

20. ஆசா. கோ : 1.6 : 1.2 21. மணி : 1.3 : : 22,  : 13 : 7 9 23. " : 13 : 46