பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 ೩) ಕಾ 517 Lui)

திறமையில் விளங்கிய கரணியத்தாலோ, குருச்சேத்திரத்தில் துரோணர் அமைந்து போர்க்கலையைப் போதித்த கரணியத் தாலோ அரசவையில் கருத்துரை நல்கும் தலைமைத் தன்மையில் அமைந்த கரணியத்தாலோ குரு' என்னும் சொல் ஆசிரியரைக் குறிப்பதாயிற்று. அதனால் குருச்சேத்திரம், அதனைச் சமைத்த தேவர்க்கு ஆசிரியத்தானமாகச் சிறப்பிக்கப்பட்டது. -

"குரு' என்ற சொல்லுக்குத் தனிப் பொருளாக ஒளி' அமைந்தது. அறிவொளி பெற்றுச் சிறந்தவர் என்னும் கருத்தில் குரு ஆசிரியப் பொருளைப் பெற்றிருக்கலாம். ஆனாலும், அச்சொல் ஆசிரியருக்குரிய ஆழ்ந்த பொருட்சிறப்பைக் கொண்டது அன்று என்பது உறுதியான உண்மை. அதனாற்றான் ஆசிரியருக்குரிய சொற்களைப் பட்டியலிடும் சூடாமணி நிகண்டு,

  • *

... ...... ... ... . . . ... ... ... ... ஆசான் ஊன்றுதே சிகனே ஒசன் உபாத்தியாயன் பணிக்கன் என்ற ஆசிரியன்பேர் 21

என்று சொற்களைக் கூறிக் குரு' என்னும் சொல்லை அப்பட் டியலில் காட்டவில்லை. பிங்கல நிகண்டு வியாழனைச் சுரகுரு' என்று குறித்தாலும் "ஆசான்' என்ற சொல்லையும் அமைக் கின்றது. சூடாமணி நிகண்டு குரு' என்னும் சொல்லை வியாழ னுக்கமைக்காது ஆசிரியன்' என்ற சொல்லையே காட்டியது.

இவற்றையெல்லாம் ஒன்றுகூட்டி நோக்குங்கால் குரு' என்னும் சொல், ஆசிரியப் பொருளைக் கொண்டதாகத் தோற்றம் பெறவில்லை என்பதை உணரலாம்.

தேசிகன்

தேசு என்றால் ஒளி அழகு என்னும் பொருள்களைக் கொண்டது. இவ் வடிப்படையிலேயே ஆசிரியப் பொருளை ஒட்டி வழங்கப்பட்டது. "தேசிகர்ப் பிழைத்து வேறோர் நினக்

கிதன் நாடி நின்றாய்” " என்னும் கம்பராமாயணப் பாடல் ஆசிரியனைத் தேசிகனாகப் பேசியது.

ε". e-π. : 2 7: 2 : 4 28. கம்ப. இரா , 1 : 1.1 109 : 3, 4