58 வளையல்
- பண்புடையான் ஒரு பணிக்கன் தோன்றி என்னும் திரு வாலவாய்ப் புராண" அடியில் படைக்கல ஆசிரியனாகப் பணிக் கன் நிற்கின்றான். -
- மேலே விளக்கப்பட்ட செந்தமிழ்ச் சொற்கள் மூன்றும், வட சொற்கள் மூன்றும், திசைச் சொற்கள் இரண்டும் கற்பிக்கும் பணியைக் கொண்டோரது தகுதியையும் திறமையையும், வெளிப் படையாகவும் குறிப்பாகவும் அண்டயாளங் காட்டின.
வழக்காறு 芬
இச்சொற்கள் நாட்டு மக்களிடையே கொண்ட வழக் காற்றை நோக்கினால் மக்களிடையே கற்பிப்போருக்கு அமைந்த பெருமையையும், நேர்ந்த சிறுமையையும் அறியலாம்.
"ஆசான்' என்னும் சொல் எழுத்து வழக்கில் அமைந்தது போன்று பேச்சு வழக்கில் இடம் பெறவில்லை. எழுத்து வழக்கில் அவரது நிறைந்த பெருமையைக் காட்டுகின்றது. அதற்கு மேலும் ஒரு படி உயர்ந்து தெய்வம்போன்ற பெருமையைக் காட்டுகின் றது. ஐம்பெருங்குழுவில் ஒருவனாக அமைந்த ஆசானை, மன்ன வனைச் சூழலறிந்து நெறிப்படுத்தும் பெரும் பீடத்தைப் பெற் றவனாகக் காண்கின்றோம். வட நாட்டரசர் இகழ்ந்தனர் எனச் சினம்பொங்கிச் சீறி வஞ்சினம் கூறும் சேரன் செங்குட்டுவன் அவையில் மாடலமறையோன் எழுந்து,
சோழ பாண்டியரை வடவர் இகழ்ந்தனரே அன்றி,
"இமய வரம்ப நின் இகழ்ந்தோர் அல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற'
மன்னன் அமைதி கொண்டதைக் காட்டுகின்றது சிலம்பு, அரசி யலில் அத்துணைப் பெருமைத் தகுதி இருந்ததை ஆசான்' குறிக்கின்றது. இஃது இயற்றமிழில் பெருமை. -
இசைத்தமிழில் காந்தாரம் என்னும் தலைமைத் தன்மை வாய்ந்த பண்ணிற்கு ஆசான்திறம்” என்பது சிறப்புப் பெயர்
30. திருவால் : 35 : !
ஒ1. சிலம்பு 26 23, 24
టి ? , 3 * 18 11: அரும்பதம்