பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 73

புலமை வழக்கு என்னும் புலமைக் கலை நிகழும் மண்டபம் 'பட்டி மண்டபம்’ எனப்பெற்றது.

பட்டி மண்டபம் என்பதற்குப் பிங்கலம்.

“பாடல் பயில் இடம் பட்டி மண்டபம்'. எனப்பொருள் விரித்துக் காட்டுகின்றது. ' பன்னரும் கலைதெரிபட்டி மண்ட பம்' - என்று பட்டி மண்டபத்தைச் சொல்லால் அளவிட்டுச் சொல்ல முடியாத சிறப்புடைய கலைகள் ஆராயப்படும் கலை மண்டபமாகப் பாடினார் கம்பர். இப்புலமைக் கலை ஒரு மண்ட பத்தில் நிகழாமல் தனி அரங்கம் களத்தில் நிகழ்ந்தால் அது :பட்டிமம்” எனப்பெற்றது. இதனையும் பிங்கல நிகண்டு.

கழகம் பட்டிமம் கல்விபயில் களம்' என்று அறிவிக் கின்றது. .

புலமைக் கலைஞர்களாம் புலவர்கள் வீற்றிருந்து பழைய நூற்பாடல்களைப் பயின்று ஆராய்வர்; புது நூல்களைப் படைப்பர்; படைத்து அரங்கேற்றுவர். இப்புலமைக் கலை நிகழும் மண்டபமே பட்டி மண்டபம்' எனப்பெற்றது. புலமை ஒரு வித்தை. இவ்வித்தை நிகழ்வதால் இதனை வித்தியா மண்டபம்' என இடைக்காலத்தில் உரையாசிரியர்கள் குறித் தனர். இப்பட்டி மண்டபத்தில் அமர்ந்து பாடல்களை ஆராயும் போது கருத்து மாறுபாடு எழுவது இயல்பு. எழுந்த கருத்து மாறுபாடு, உரையாடலாய்ப் பின் சொல்லாடலாய் வளர்ந்து, சொற்போர் புரிந்து வழக்காடும் அளவில் பெருகும். சொற்போர் புரிந்து முடிவு காண இம்மண்டபத்தையே கொண்டனர். அதனால் பட்டி மண்டபம் சொற்போருக்கு உரிய இடம் ஆயிற்று.

'மதுரைப் பட்டி மண்டபம் புகுந்து குயக்கொண்டான் ஆரியம் நன்று: தமிழ் தீது என்றான்' எனப் பேராசிரியர்

总鲁。 9ು ·台台岛

31. கம்ப. இரா நகரப்படலம் 62 - 4

32. பிங் - 70 கி.

33. தொல் பொருள் -480 உரை