பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற போதே, பாண்டியனுடைய குலமுதல்வகிைய திங்களும் நாட்டு வளத்திற்குக் காரணமாகிய வான்மேகமும் அடிசாய் கின்ற உவமைக்குறிப்பும் உய்த்துணரக் கிடைக்கின்றது. 8. மாநில ஆட்சி மன்னவல்ை மரபுவழிச் சிறக்கின்றபோது நிலமகள் ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்து தாய்போல் மகிழ் வாள் என்பது இலக்கிய உண்மை; க லிங்கத்துப்பரணி இராச பாரம்பரியத்தில், ' வையக மாங் குலமடந்தை மன்னபயன் தன்னுடைய மரபு கேட்டே ஐயனே யான் பெற்றெடுத்த அப்பொழுதும் இப்பொழுதொத் திருந்ததில்லே, என வருதலைக் காணலாம் இந் நிலையில் நிலமகள், பாண்டியனது மரபுவழி நீதியைக் காண முடியாதபோது மணமுடைந்து போகிருள். மேலும் குற்றமறியாக் கல்லாகி விடுகிருள். ஆம், அதற்கு அறிகுறியாகத்தான் சேரன் செங்குட்டுவனும் நில மகளின் உயர் அடையாளமாகவுள்ள இமயத்திலிருந்து கல் கொணர்கிருன்! அந்தக் கல்லும் கண்ணகியின் வடிவந் தாங்கிச் சொல்லொனத் துன்பத்தைச் சுட்டுகின்ற பொறுப்பேற்றுக் கொள்கிறது. நிலமகளும் - தன்னகத்தே - தன்னுல் குலமகள் கண்ணகிக்கு வாழ்வின்பம் கொடுக்க முடியாததை யுணர்ந்து, அவளே விண்ணுலகில் வலவன் ஏவா வான ஆர்தி மூலம் ஏற்றிக் கணவனுடன் வாழச்செய்து விடுகிருள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/101&oldid=743216" இலிருந்து மீள்விக்கப்பட்டது