பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கண்ட பேருரையாசிரியர்களெல்லோரும் ஒன்றுபோல் உடைமை என்ற சொல்லுக்குப் பொருட் செல்வம்’ என்று பொருள் படும் படியாகவே கூறியுள்ளனர். இக் கருத்து எவ்வள ளவுக்குப் பொருந்தும் என்பது ஆய்தற்குரியது. தம்மிடமுள்ள பொருளே பணத்தை)ப் பிறர் பெற்று மகிழும் அளவுக்குக் கொடுத்து, பெற்றவர் அதல்ை மகிழ்வதைப் பார்த்து ஈந்தவனும் மகிழ்வான் என்பது எவ்வளவுக்கு உண்மை யாகும்! திருக்குறள் என்ற தெய்வத் தமிழ்மறை எக்காலத் திற் கும், எவ்வினத்தவர்க்கும், எந்நாட்டவர்க்கும் பொதுவான உண்மையைக் கூறும் அற நூல் என்பது யாவரும் ஒப்பமுடிந்த உண்மையாகும், அவ்வாறிருக்க, இக்குறளில் 'உடைமை' என்ற சொல்லுக்குப் பொருட்செல்வம்' என்று கூறுவது உண்மைக்கும், உலகியலுக்கும் மாரு கப்படுகின்றதே? கொடையில் சோற்றுக் கொடை தவிர, பொருட் கொடை எவ்வளவு பெற்ருலும் மனத் தில் திருப்தி ஏற்படுமோ? பன்ள்ை வயிறு நிரம்புமளவுக்குத்தான் சோற்! வயிறு நிரம்பிய பின் ஒரு பருக்Wை யக்கூட வேண்டாம் போதும் என்றுதான் சொல்லுவான். ஆனல் பொருளைப் பெறுபவனுக்கு, எவ்வளவு அதிகப் பொருள் பெற்ருலும், மனத் திருப்தி ஏற்படுவதில்லை. மேலும் மேலும் பெறவும், சேர்க்கவும் தா ன் விழைவான். எனவே பொருட் செல்வம் பெற்றவன் உவக்கும் என்று நினைப்பது ஐயப்பாடே. ஈத்துவக்கும் இன்பம் என்ற தொடருக்கு, வள்ளல் ஈவதால் பெறுவோன் அடையும் உவகையாகிய இன்பம் என்று பொருள் கொள்வதும் ஒரு முறை. கப் பசித்தவனும் கூட விரும்புவானே தவிர, இக் கொடையின் மறுபுறம் பார்ப்போம் தன்னிடம் உள்ள தான் தேடி வைத்த செல்வப் பொருளே இரப்பவனுக்குக் கொடுக்கும் எந்தக் கொடையாளியும் புனிதமான உவகையின் பம் பெறுகிருன் என்று சொல்ல முடியுமா? பொருளேப் பிறருக்கு ஈபவன் ஏதேனும் ஒரு குறியெதிர்ப்பை நோக்கு கிருன் , அல்லது அவனது உள் மனத்தில் அவ்விழப்பின் உணர்வு இருந்து கொண்டு.தானிருக்கும். அவ்வியல்பு இக் கலி காலப் பண் பென வாதிடுவோர் உளராயின், நம் குறள் எக் காலத்துக்கும் பொது 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/103&oldid=743218" இலிருந்து மீள்விக்கப்பட்டது