பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்கா அமெரிக்காவில் சிக்காகோ, பென்சில்வேனியா, கலிபோர் னியா ஆகிய மூன்று பல்கலைக் கழகங்களிலும் தமிழ் பயிலும், வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. “பல் கலைச் செல்வர்” தெ. பொ. மீ. அவர்கள் சிக்காகோவில் தமிழ்ப் படிப்பைத் தொடங்கி வைத்து வந்தார். பென்சில்வேனியாவில் பேராசிரியர் லீ. இலிச கார் அவர்களும் கலிபோர்னியா வில் பேராசிரியர் கும் பார் சு அவர்களும் தமிழ்த் துறையைப் பேணிக் கண் காணித்து வருகின்றனர். திருவனந்தபுரம் பல்க லேக் கழக மொழியியற் பேரா சிரியர் கலேமுனைவர் வி. ஐ. சுப்பிரமணியன் அவர்கள் வடசேரி வழக்குத் தமிழ்’’ குறித்து எழுதிய ஆய்வுக் கட்டுரைக்கு இந்தியன பல்கலைக் கழகத்தினர் கலைமுனைவர் பட்டமளித்துப் போற்றினர். சிலப்பதிகாரமும் சங்க இலக்கியப் பாடல்கள் பலவும் கலிபோர்னியாப் பல் கலேக் கழகத் தாரால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சிப்பட்டம் பெறும் ஆர்வத்துடன் பேராசிரியர் பர்டன் திருப்பதி கோயில்’ குறித்தும், கார்க் கிராவ் 'தி. மு. க.” பற்றியும், யூ சின் இர்சிக்கு "நீதிக் கட்சி” நிலே யையும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். நியூயார்க் கைச் சார்ந்த ஆலன் தேனியல் 1965-ஆம் ஆண்டு சிலப்பதிகாரத்தை மொழி பெயர்த்துள்ளார். சிக் காகோ பல் கலேக் கழகம் தென் ஆசிய இலக்கிய முத்திங்கள் இதழொன்றை 'மாக்பில்’ என்னும் பெயருடன் நடத்துகிறது. தமிழ் இலக்கியம் பற்றி ஆங்கிலத்தில் நாளது வரை வெளிவந்துள்ள எழுத்துக் களும் ஏடுகளும் குறித்து 1968-ஆம் ஆண்டில் மூன் ரும் இதழில் சூசன் நீல் அழகிய கட்டுரை எழுதியுள்ளார் (3) ஏல் பல்கலைக் கழகத்தின் அழைப்பை ஏற்றுச் சென்ற பேரறிஞர் அண்ணு அவர்கள் அங்கே மாணவர்க்குத் திருக்குறள் கற்றுத்தந்தமை குறிப்பிடத் தக்கது. 'அமெரிக்க வானெலியில் தமிழ் முழக்கம் தொடர்ந்து அமையவேண்டும்.’’ என்று அனே வரும் வலியுறுத்தி வருகின்றனர். நியூயார்க்கில் பாரதி சங்க மும் நியூயார்க்குத் தமிழ்ச் சங்கமும் செயலாற்றி வருகின்றன. ஆலந்து - ஆலந்து நாட்டு இலேடன் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கூப்பர் 'தமிழ் ஒலி முறை” பற்றி ஆராய்ந்து வருகிருர், பழந் தமிழ்ச் சுவடிகள் பல அந்நாட்டில் உள. 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/108&oldid=743223" இலிருந்து மீள்விக்கப்பட்டது