பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத்தாலி பதினேழாம் நூற்ருண்டினரான இராபர்ட் தே நொபிலியும் (1577-1653), பதினெட்டாம் நூற்றண்டினரான வீரமாமுனிவரும் (1680-1747) தமிழ் உரைநடையில் மறு மலர்ச்சியை ஏற்படுத்திய வராவர். தமிழகம் வந்த இவர்கள் வாயிலாக உலக இலக்கிய உறவும் உணர்வும் தமிழ்நாட்டில் காலூன்றியது. அறிஞர் தனிநாயம் அடிகளார் கூறுவது போன்று, வீரமாமுனிவர் வாயிலாகவே இலத்தீன் இத்தாலிய இலக்கியங்கள் தமிழ் இலக் கியத்திற்குப் பின்ன னியாயின. தவத்திரு இக்னேசியசு புருனே (1576–1659) அகராதி ஒன்று வெளியிட்டதாகத் தோன்றுகிறது. தவத்திரு. சூர்காமர் பதிருைம் நூற்ருண்டுச் செய்தி நூல்’ ’ வெளியீட்டாளராவார். 1934-ஆம் ஆண்டில் உராமாபுரியில் வீரமாமுனிவர் கழகம் உருவாயிற்று. பதினேழாம் நூற்ருண்டில் அம்பலக்காட்டில் அச்சாகிய போர்த்துக்கீசியத் தமிழ் அகராதி யும் 1586இல் புன்னே க் காயலில் அச்சிடப்பட்ட 664 பக்கங்கள் கொண்ட திருத்தொண்டர் வரலாறும் வத்திக்கான் நூலகத் தில் இடம் பெற்றுள்ளன என்பர் தனிநாயகம் அடிகளார். (4) தவத்திரு. சோசப் விக்கி அடிகளார் இந்தியாவைப் பற்றிச் சேசு சபையார் விடுத்த கடிதங்களேத் தொகுத்துத் தந்துள்ளார். வெளிநாட்டார் பார்வையில் தமிழ் மொழிகளும் மக்களும் அமைந்த நிலையை உணர்வதற்கு இத்தொகுப்பு துணை செய்யும். நாயன்மாரைப் பற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய தவத்திரு. தவமணி அடிகளாருக்கு ஆக்சுபோர்டு பல்க லேக் கழகம் கலேமுனைவர் பட்டமளித்துப் பாராட்டியது. இலங்கை குமரிக்கண்டத்தைக் கடல் கொள்வதற்கு முன்னர்ப் பழந் தமிழ் நாட்டுடன் இணேந்திருந்த தென் இலங்கை முன் நாளில் இருந்தே அருந்தமிழ் வளர்ச்சிக்குப் பெரும்பணி புரிந்துள்ளது. விவிலியத் தமிழாக்கத்திற்குத் துணே நின்ற ஆறுமுக நாவலர், தொல்காப்பியத்தைப் பதிப்பித்துத் தந்த சி.வை தாமோதரனர், “யாழ் நூல்' நல்கிய விபுலானந்தர் ஆகியோர் பத்தொன்பதாம் நூற்றண்டில் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய ஈழத்துச் சான் | O2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/110&oldid=743226" இலிருந்து மீள்விக்கப்பட்டது