பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ருேராவர். நல்லூர் ஞானப்பிரகாசர் என்னும் அறிஞர், எழுபது மொழிகளே க் கற்று, “உலகின் உயர் தனிச் செம்மொழி தமிழே.” என்று உணர்த்தியவராவார். 'சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி” அருளுய காப்பிரகாசர் மொழி நூல் ஆராய்சியின் முதல்வராக மிளிர் கிருர் சைவ சித்தாந்த நூலே 1854இல் ஆங்கிலத்தில் வழங்கியுள்ளார் தவத் திரு கோசிங்டன். ஒளவையார் பாட்டு க '. சிரிகண்டரும், மாணிக்கவாசகர் - தாயுமானவர் பாடல் களே அருணுசலமும், மூதுரை-நல்வழியைத் தவத்திரு சிரத்தும், குறிஞ்சிப்பாட்டு - பொருநராற்றுப்படையைக் குமாரசாமியும் பத்துப்பாட்டை ச் செல்லே யாவும், திருமுரு காற்றுப்படையை நாராயணனும், சிவஞான போதத்தைக் கனகராயரும் ஆங்கில மாக்கியுள்ளனர். முனேவர் ஐசக் தம்பையிா தாயுமானவருடைய 366 பாடல்களே 89 பக்க விரிவான முன் னுரையுடன் ஆங்கிலத் தில் தந்துள்ளார். இலங்கைப் பல்கலைக் கழக விரிவுரையாளராக விளங்கிய அறிஞர் தனிநாயகம் அடிகளார் திருக்குறள் கருத்துக் களே பிளேட்டோ, அரி சுடாட்டில் சிந்தனைகளை ஒப்பிட்டு வள்ளுவரின் பெருமையை உள்ளங் கொள்ளும் வகையில் தெள்ளிதின் விளம்பியுள்ளார். இலங்கை வானெலியும் இதழ் களும் இனிய தமிழை இவ்வுலகெங்கும் எடுத்தியம்பும் முறை ஏற்றம்மிக்க து; பாராட்டத்தக்கது . இந்தோனேசியா ஒன்பாம் திருமுறையில் இடம் பெற்றுள்ள திருவீழிமிழலே சேந்தனு ரது திருப்பல்லாண்டு இந்தோனேசியாவில் தொல் குடிச் செல்வர் இல்லங்களில் திருமணக் காலத்தில் ஒதப்பெறு கிறது. (5) இந்தேனேசியாவில் தமிழ் உணர்வு சான்ற பெரு மக்கள் பலர் உள்ளனர். மூவாயிரம் தீவுகள் கொண்ட இந்தோ னேசியக் குடியரசில் முதன்மை பெறும் செம்பொன் நாடாகிய சாவகம் பண்டுதொட்டுத்தமிழகத்துடன் நெருங்கிய தொடர் | օԾ» L- Ս.135յ. சுமத்திராவில் வாழும் காரோபட்டக்கு இனத்தார் தம் இன மக்களைச் சேரர், சோழர், பாண்டியர் என்றெல்லாம் பகுத்துப் பேசுகின்றனர். (6). துணை, காவலர், தோழன், நிலே, சங்கம், இடம், வட்டில், பண்டம், கலம், கடலே, கண்டு என் னும் தமிழ்ச் சொற்கள் ஏட்டிலும் நாட்டிலும் வழக்கில் உள்ளன. 103

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/111&oldid=743227" இலிருந்து மீள்விக்கப்பட்டது