பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருசியா சோவியத் உருசியாவில் லெனின் கிராது பல்கலைக் கழகம், தாசு கண்டு பல்கலைக் கழகம், உக்கிரோனிய வாவுப் பல்கலைக்கழகம் மாசுகோ பல்கலைக் கழகம், ஆசிய மக்கள் நிலையம் ஆகிய ஐந்து இடங்களில் தமிழ்த்துறை வாயிலாக முறையாகத் தமிழ்க் கல்வி பயிலலாம் (7 ). லெபதேவு என்னும் உருசியரே முதன் முதலில் 1785-ஆம் ஆண்டில் தமிழ் பயின்றதாகத் தெரிகிறது, வட்டார வழக்குத் தமிழை ஆராய்ந்து வரும் அறிஞர் ஆந்திரனேவ் தமிழ் இலக்கண நூல் ஒன்றை உருசிய மொழியில் எழுதித் தமிழைக் கற்கத் துணையும் தூண்டுதலும் தந்துள்ளார். ஏறத்தாழ இருபத்து மூவாயிரம் சொற்கள் கொண்ட உருசியத் தமிழ் அகராதியை வெளியிட்ட இவர் தமிழ் மொழியில் உயிர் மெய் எழுத்துக்கள் பற்றியும் விஜனச் சொற்களின் வடிவமைப்புக் குறித்தும் கட்டுரை கள் எழுதியிருக்கிறர். அறிஞர் அ. சிதம்பர நாதர் தூண்டுதலு டன் செம்பியன்’ என அழைக்கப் பெறும் உருதின் செம்பியன் லெனின் கிராது பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகத் திகழ்கிருர், 38,000 சொற்கள் கொண்ட உருசிய தமிழ் அகராதியை வழங்கியுள்ள இவர், பாரதியார், பாரதி த சன் பாடல்களே உருசிய மொழியில் பெயர்த்தளித்தவராவார். கண்ணன் என்று தம்மை அழைக்க விழையும் முனைவர் கிளே சோவு திருக்குறளேயும் சிலப் பதிகாரத்தையும் மொழியெர்த்துள்ளார். “பாரிலுள்ள நூல்களெல் லாம் பார்த்தறியச் சித்திலே ஒர் விருத்தப் பாதிபேதும் என்று ஏத்தப்படும் சிவஞான சித் தியாத் திரை மொழி பெயர்த்து, "இந்திய தத்துவத்தில் சைவ சித்தாந்தம்” குறித்து ஆய்வு நடாத்திய முஜன வர் பியார்த்திகோக கி தமிழ் ஆர்வம் மிக்கவரா வார். இவருடன் இவா ைேல் , திரு வாட்டி சிமிர் நோவா ஆகியோர் இ8.ணந்து புதுமைப்பித் தன் , தொ. மு. சி. இரகுநாதன் செயகாந்தன் கதைகளே மொழி பெயர்த் துள்ளனர். இப்ரா கிமோ இலங்கைத் தமிழர் கதைகளே மொழி பெயர்த்துள்ளர். புலிட்சு கொடுந் தமிழை ஆராய்ந்துள்ளார் . போய ரும், கேரும் இணைந்து எழுதியுள்ள இந்திய மொழிகள் ஆய்வு நூலில் தமிழ் ஒலியியல் பற்றி விரிவாக க் கூறப்பட்டுள்ளது. மெர் வார்தே திராவிட மொழி கள் குறித்து கட்டுரை வரைந்தவராவார். இருபத் ைதந்தாவது கீழ்த்திசை மொழி மாநாடு மாசுகோவில் நடைபெற்றது. 104

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/112&oldid=743228" இலிருந்து மீள்விக்கப்பட்டது