பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைத் தமிழ், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் என்பன போன்ற அச்சேருத தமிழ் ஏடுகள் உள்ளன என்றும் கண்டு ணர்ந்து விண்டுரைத்துள்ளார் அறிஞர் தனிநாயகம் அடிகளார் (10). இவீன் செயின்ட் சீன் காரைக் காலம்மையார் பாடலேயும், சூலியன் வின் சன் திருவாய் மொழியினையும் பெயர்த்தளித் தவராவார். 'தமிழ் இலக்கியத்தில் யவனம்’ பற்றி எழுதியவர் பேராசிரியர் மேலு. திருக்குறள் நாலடியார், சிலப்பதிகாரம், கம்பர் பாடல்கள் பிரெஞ்சு மொழியில் இடம் பெற்றுள்ளன. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத் தலைவராகிய பேராசிரியர் சீன் பில்லியோசா மூன் ருவது உலகத் தமிழ் மாநாட்டைப் பாரிசு மாநகரில் நடத்தித்தந்தார். பாரிசு பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறை அமைந்திருப்பதோடு, அண்மையில் வெளிநாடுகளில் தமிழ் பயில்வோர் நலனுக்காக 'மாணவர் தமிழ் மன்றம்’ புதுவை முதலமைச்சர் மாண்புமிகு பரூக் மரைக்காயர் தலைமையில் தொடங்கி வைக்கப்பெற்றது . போர்த்துக்கல் ஐரோப்பாவின் அரசியாக வி ள ங் கி ய இலிசுபன், ஒபோர்ட்டோ கோயிம்புரா நகர நூலகங்களில் பழந்தமிழ் நூல் களும் ஏடுகளும் பலவுள. தமிழக வரலாற்றுக்குப் பெருந்துணை தரும் கையெழுத்துப் படிகளும் செய்திகளும் இங்கே நிறைய உள்ளன. பதினேழாம் நூற்ருண்டின தாகிய தமிழிலக்கணக் கையெழுத்துப்படி இங்குள்ள நூல்களுள் குறிப்பிடத்தக் கது. இலிசிபானின் 1554-ஆம் ஆண்டில் உரோமானிய எழுத்துக் களைக் கொண்டு முப்பத்தாறு பக்க அளவில் அச்சாகிய தமிழ் நூல் சமய வழிபாட்டு முறைகளையும் செபங்களையும் விளக்குகிறது. போர்த் துக்கீசியராகிய என்றி ஆந்திரிக்கசு அடிகளார் பதிருைம் நூற் ருண்டில் 'தம்பிரான் வணக்கம்” “கிரிசித்தியானி வணக்கம்’ "திருத்தொண்டர் வரலாறு” ஆகிய நூல்களே அச்சிட்டுத் தமிழ் அச்சுத் துறையின் தந்தையாகத் திகழ்கின் ருர். அந்தோணி பிரயேன் சா அடிகளார் வழியில் நல்லூர் ஞானப்பிரசாசர் போர்த்துக்கீசி-தமிழ்-சிங்கள அகராதியை உருவாக்கியுள்ளார். மலேயா மலேய மொழியிலும் சீன மொழியிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரு மொழி கற்ற அறிஞர் தனி 108

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/116&oldid=743232" இலிருந்து மீள்விக்கப்பட்டது