பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாயகம் அடிகளார் மலேயாப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரி யராகத் திகழ்ந்தார். அடிகளாருடைய அரும்பெரும் முயற்சி யால் முதல் உலகத் தமிழ் மாநாடு கோலாலம்பூரில் கூடி உல கெங்கும் தமிழ் பரவியுள்ளமையை உறுதி செய்தது. “தமிழ்ப் பண்பாடு” என்னும் ஆங்கில முத்திங்கள் ஏட்டில் ஆசிரியராக வும் பணியாற்றி அடிகளார் தாயெழில் தமிழையும் தமிழரின் கவிதைகளையும் ஆயிரம் மொழியில் காண இப்புவி மக்களிடையே செயலாற்றி ஆர்வத்தினைத் துாண்டி வருகிறர். அறிஞர் சிங்காரவேலு மலேய மொழி இராமாயணத்தையும் கம்பர் எழுதிய இராமகாதையினையும் ஒப்பிட்டு, ஆராய்கிருர். முனே வர் வான் ராங் கோல் தமிழ்-மலேய மொழியியல் ஆய்வினை மேற்கொண் டுள்ளார். தமிழ்க் கல்வியில் நாட்டமுடையயோருக்கு வழிகாட்டி வெளியிட் டுள்ள அறிஞர் தனிநாயகம் அடிகளார் 122 பக்கங்களில் 1355 தமிழ்ப் புத்தகங்களேப் பற்றிக் குறிப்பிட்டு எழுதி மலேயாப் பல்கலைக் கழகம் வாயிலாக 1966இல் வெளியிட்டுள்ளார். “தமிழ் முரசு’ முதலிய நாளிதழ்களும் சிங்கப்பூர், கோலாலம்பூர் வானெலி நிலையங்களும் நற்றமிழ்ப் பணியை நாளும் நிறை வேற்றி வருகின்றன. 'தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார் இங்கமரர் சிறப்புக் கண்டார்’ (11) என்னும் பாரதியாரின் மொழி வழியே ஏறத்தாழ நாற்பது நாட்டு மக்கள் தமிழ் மொழியை ஆராயவும் ஆர்வத்துடன் பயிலவும் காண்கிருேம். எடுத்தாளப் பெற்ற நூல்கள் 1. “பாரதியார் கவிதைகள்’-அருணு பதிப்பகம்-9ஆம் பதிப் பு 1962 நல. பக்கம் 50. 2. 'பாரதியார் கவிதைகள்' பக்கம் 48. 3, MAHFIL-A Quarterly of South Asian Literature—Volume IV No. 3 & 4 பக்கம் 107-112 109

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/117&oldid=743233" இலிருந்து மீள்விக்கப்பட்டது