பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிரைநிலை மாடத்து அரமியம் ஏறும்பொழுது கூடக் கோவலன் தான் வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் கண்டுமகிழ் வெய்திக் காதலிற் சிறந்து - மனையறம், 24-5. செல்கின்றான். இங்கும் கண்ணகி காதலைப்பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இதுதான் போகட்டும். தாரும் மாலையும் மயங்கிக் கையற்ற பின்னரேனும் அவள் நெஞ்சம் காதலால் நிரம்பியிருக்க வேண்டுமல்லவா? அவ்வமயத்தும் தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கோவலன் கூறுமோர் குறியாக் கட்டுரை -மனையறம், 35-6. என்று கோவலன் காதலைத்தான் மிகுதிப்படுத்துகிறார் கவிஞர். காதற் கொழுநன். காதலிற் சிறந்து, தீராக் காதலுற்றான் என்று படிப்படியாகக் கோவலனது காதல் வளர்ச்சியைத்தான் இளங்கோவடிகள் படம்பிடித்துக் காட்டுகின்றார். தாரும் மாலையும் மயங்கிய பின்னரும் காதல் என்பது இன்னதென உணராது தூய குலமகளாய், குடும்ப நங்கையாய்த் திகழ்கின்றாள் கண்ணகிநல்லாள். இனி, கோவலன் தன்னை விட்டுப் பிரிந்து மாதவியிடம் சென்று தங்கித் தன்னை அவன் மறந்திருந்த காலத்திலாவது கண்ணகிக் குக் "காதல்" தோன்ற வேண்டுமே. கோவலன் பிரிந்தமைக்குக் கண்ணகி பெரிதும் வருந்துகிறாள். ஆனால் அவனது காதலை இழந்தமைக்கு அவள் வருந்தவில்லை. அறவோர்க் களித்தலும் அந்தணர் ஒம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் -கொலை, 71-3. ஆகிய இல்லறப் பண்புகளை, குடும்பக் கடமைகளே இழந்தமைக்கே கண்ணகி வருந்துகிறாள். இதனால்தான் மணவறை யிலேயே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/12&oldid=1404846" இலிருந்து மீள்விக்கப்பட்டது