பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ. தாம் அறிந்த இதிகாச புராணச் செய்திகளையும் வேண்டுழி எடுத்து உவகை யாகக் கூறி யுள்ளனர். ஈ. அந்நாளில் நடந்த வரலாற்றுச் செய்திகளையும், அகம், புறம் ஆகிய இரு இலக்கியங்களிலும் Ф_rst rst}} LD 55 $/ГIT 5Һ ஒதியுள்ளனர். உ. துண் பொருளாகிய பண்புகளையும் உவமைகளாக்கித் தம் கருத்தை விளக்கியுள்ளனர். ஒரே மாதிரியான உவமைகள் புலவர்கள் தம் அனுபவத்திற் கேற்ப உவமைகளேப் பலவாக் கூறினும் அவற்றிற் சிற்சில ஒரே மாதிரியாகவும், ஒரே வகை யாகவும் உள்ளன. இங்ானம் ஒரே வகையான உவமைகளேச் சொல்லும் போது அடைச் சொற்களை மட்டும் கூட்டியோ குறைத்தோ புதுக்கிக் காட்டுவர். சில போது உவமைப் பொருள்கள் ஒன்ருக இருப்பினும் உவமேயப் பொருளே மாற்றி வைப்பதும் உண்டு. இத்தகைய ஒரே வகையான உவமான உவமேயப் பொருள்களேக் காணும் பொழுது நீண்டகால இலக் கிய மரபு ஒன்று இருந்தமை நன்கு தெரிகிறத. இம்மரபினையே புலவர்கள் வழி வழிக் கற்றும் கேட்டும் உணர்ந்தும் தம் பாடல் களில் புனேந்துள்ளனர் எனவே ஒரே வகையான உவமை மட்டும் அமைதல் கொண்டு புலவர் களின் காலத்தை முன்னென் றும், பின் னென்றும் கணிப்பது சாலாது. புறநானூறும் உவமைகளும் புறநானூற்றுப் புலவர் தம் உவமைகள் பலவும், அவ்வப் புலவர்களின் கற்பனைத்திறம், புலமைத்திறம் இவற்றிற்கும் ஏற்ப அமைந்துள்ளன. இத்தகைய உவமைகள் ஒரே பாட்டில் பல வரும் பாடல்களும் உண்டு. இப்புலவர்கள் தாம் விளக்கப்புகும் கருத்திற்குத் தமது உவமைப் பொருட்கள் எந்த அளவு பொருத்த முடையன என்பதிற்ருன் பெரிதும் கருத்துச் செலுத்தினர். உவமைப் பொருட்களில் உயர்வு தாழ்வு, பெருமை சிறுமை இருப் பதாக எண்ணி, விலக்கிவிடவில்லே. தொழில், பயன், மெய் உரு 1 1 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/125&oldid=743242" இலிருந்து மீள்விக்கப்பட்டது