பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலத்தில் தாழிசை, துறை, விருத்தம் எனும் பாவினங்கள் தோன்றலாயின. அவற்றுள் விருத்தம் ஒலிநயத்தைப் புலப் படுத்துவதில் தனிச்சிறப்புடன் திகழ்ந்ததாற் பெருஞ் செல் வாக்குப் பெற்றுப் பற்பல வகையான ஒலி வேறுபாடுகளுடன் வளர்வதாயிற்று. இவ்வளர்ச்சியின் உயர்ச்சி நிலேயே அருண கிரிநாதரின் காலம் என்று நாம் கூறலாம். வாழ்த்து அல்லது வணக்கம் முன் வர இலக்கியங்களேப் படைத்தல் ஒரு விழுமிய மரபாகும். இம்மரபினேப் பின்பற்றிய அருணகிரிநாதர் தமது இலக்கியத்தைப் படைத்துள்ளார். விநாயக வன க்கம் கூறி முருகப்பெருமான் வணக்கம் கூறித் தமது இலக்கியத்தைத் தொடங்குகிறர். அவருடைய சந்தப் பாக்கள் அடிதொறும் தொங்கல் ஒன்றும் அழகு மிக அமையுமாறு அமைந்தன. பாடலின் முடிவு பெருமாளே அல்லது தம்பிரானே எனப் பொலிவுற அமைந்துள்ளது . சந்தப் பாவ கைக்கு அருணகிரிநாதர் குரு என்றே நாம் கூறலாம். இத்துறையில் அவருக்கு இணை அன்றும் இல்லே இன்றும் இல்லே. இன்று கிடைக்கும் 1307 பாடல்களில் 1008 சந்த வகை கள் அமைந்து காணப்படுகின்றன . ΠΒ 652 L தடை புலவரின் உள்ளத்தினேயொட்டியது. இலக்கியங்கள் இவ்வுலகிட்ை என்றும் அழியா நிலேயான வாழ்வினேப் பெறு வதற்கு அவைகளில் காணப்படும் நடை பெருந்துணே புரிகின் றது. கடின நடையிலும் எளிய நடையிலும் இலக்கியங்களேப் படைப்பதில் வல்லவர் அருணகிரிநாதர். அவருடைய கடின ந ைட கற்றவர்களும் கலங்கும் வண்ணம் காணப்படும்' அவருடைய எளிய நடை எல்லோரும் எளிதில் கற்று இன்புறும் வகையில் அமைந்து காணப்படும்". - --- _ 1. தாமா தாமா லா பா லோ கா தாரா த ராத் தரணி சா தா ன சாரோ பாவல பாபோ - திருப். 381. 2. முகம் இழிந்தது நேரக்கும் இருண்டது இருமல் வந்தது தூக்கம் ஒழிந்தது - மொழி தளர்ந்தது நாக்கும் வளர்ந்தது - திருப். 1193 130

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/138&oldid=743256" இலிருந்து மீள்விக்கப்பட்டது