பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊடற் கோலமோடு இருந்தோன் உவப்ப - கடலாடு, 75. மாதவி மேற்கொண்ட முயற்சி மிக மிகப் பெரியதாகும். அதன் பொருட்டு அவள் கொண்ட கோலங்களே முப்பத்தைந்து அடிகளால் வருணிக் கிருர் அடிகளார் . எத்தனே முயன்றும் அவளது முயற்சி வெற்றி பெற்றதாக அறிய இயலவில்லே. அவனது ஊடலைத் தீர்த்தற் பொருட்டு அவள் மேற் கொண்ட அழகுக் கோலங்கள் அவனேக் கவரவில்லே என்றே தோன்றுகிறது. ஏன்? அதன் பின்னரும் அவள்தான், கூடலும் ஊடலும் கோவலற் களித்தாள் -கடலாடு, 109. ஊடல் மாதவி அளிக்க, கூடல் கோவலன் அளித்ததாக வாவது காட்ட வேண்டுமல்லவா? இரண்டும் அவளே அவனுக் களித் தாள். அங்கு கோவலனிடத்தில் இருந்த கண்ணகிபோல் இங்கு மாதவிபால் காதலைப்பற்றிக் கவலேப்படாது கட்டைபோல் நின்ருன் அவன். கண்ணகிக்கும் கோவலனுக்கும் இருவர்க் கும் இருக்கவேண்டிய காதலின் அளவு முழுவதும் சேர்ந்து அங்குக் கோவலன் பால் திகழக் கண்டோம். இங்கு மாதவிக் கும் கோவலனுக்கும் இருக்கவேண்டிய காதல் முழுவதும் மாதவியிடமே உறைந்து நின்றமை காண்கின் ருேம். கோவலன் இங்குக் கண்ண கியாய்விடுகின்றன். கண்ணகியிடம் நாம் கண்ட கோவலனுய் மாறிவிடுகின் ருள் மாதவி. மடலவிழ் கானற் கடல் விளையாட்டினும் .ே காவலன் ஊடக் கூடா தேகிள்ை மாமலர் நெடுங்கண் மாதவி - வேனில், 14 - 6 இங்கும் ஊடலேக் கோவலனுக்கும் கூடலே மாதவிக்குமாக முரண்படத் தொடுத்துக் காட்டுகின் ருர் கவிஞர். இஃது அக் கால் விலைமகளிர் சமுதாய நிழற்பட ம் எனலாம. நங்கையர் முரண் குலமகளிர் சமுதாய நிலையைக் கண்ணகி வாயிலாகவும், விஜலமகளிர் சமுதாய நிலே யை மாதவி வாயிலாகவும் இங்ங்னம் உள்ளது உள்ளவாறு எடுத்துக்காட்டுகின் ருர் இளங்கோ. இது Realism என்னும் உண்மையுரை த்தலின் பாற்படும். காதலேப் பற்றிக் கவலைப்படாது குடும்பமே கதியாய் வாழ்ந்தது குலமகளிர் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/14&oldid=743258" இலிருந்து மீள்விக்கப்பட்டது