பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந கை அருணகிரிநாதர் பொதுமகளிரை எள்ளி நகை யாடுகிறர். அவர் பொதுமகளிரைக் கப்பரை கை க் கொள வைப்பவர் (1228) என்றும் கஞ்சுளியுந் தடியும் கொடுத் துப் போவெனச் சொல்பவர் (767) என்றும் கூறுகிரு.ர். அழுகை மயக்கம் பெருகவும் பேச்சு அடங்கவும், கண்கள் சுழலவும் சூடு தணியவும், மலம் ஒழுகவும், தாயும், மனேவியும் அச்சமுற்று அழ யமன் வருவான். (49) இளிவரல் மூடர்கள் மீதும், வஞ்சகர்கள் மீதும் பாடல்கள் பாடி பொருள் தேடித் தெருக்களில் உலாவித் திரிந்து பெண்களுக்கு அப்பொருளினை அன்பளிப்பாக க் கொடுத்து வாழ்க்கையினே க் கெடுத்தேன் என்று அருணகிரிநாதர் வருந்து கிருர்.(494) மருட்கை முருகப்பெருமான் தினைப்புனத்திருந்த செவ்விய காட்டு வேடர்கள் திகைப்புற்று ஐயோ இதென்ன அதிசயம் என்று கூறும்படியாக வேங்கை மரமாக நின் ருர்.(26) அச்சம் பரம்பொருளாக கணபதி மதயானை உருவு கொண்டுவர வள்ளி அச்சமுற்று முருகப் பெருமான அனேயப்பெற்ருள். (177) பெருமிதம் மடல், பரணி, கோவை, கலம்பகம் முதலான கோடிக் கனக் கான பிரபந்த வகை களேப் பாடியும், வெண்குடை , கொடி, தாளம், மேளம், பல்லக்கு முதலான சிறப்புச் சின்னங் களோடு உலவி வரும் மயக்க அறிவும் பெருமிதமும் உள்ளத் தினின்றும் அழிதல் வேண்டும் (80). --" 133

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/141&oldid=743260" இலிருந்து மீள்விக்கப்பட்டது