பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.1. மலேயாள மாவட்டத்தில், பாலக் காடு பகுதியைச் சார்ந்த நடுவட்டம் என்ற பகுதியில் கூடலூர் என்ற ஒர் ஊருண்டு, இவ்வூரில் வாழ்ந்தவரே கூடலூர் கிழார். இவரைக் கொண்டே சேரன் ஐங்குறு நூற்றைத் தொகுப்பித்தான். கூடலூர் கிழார் பாடிய ஒரே புறப்பாட்டு புறநானூறு 229-ஆகும்’ இப்பாட்டில் தான், புலவர் அரிய வானியல் குறிப்பை அளிக்கிருர், 1.2 வானில், புகைக்கொடி என்ற தூமகேது, பூமிக்கு விளக்குப்போல ஒளியிட்டு, பெரும் ஒசையுடன், தீப்பறக்கக் காற்ருல் பிதிர்ந்து கிளர்ந்து உறுமி, விழுந்ததாகவும், அதல்ை ஏழாம் நாள் சேர அரசன் யானே க் கண் சேய்மாந்தரஞ் சேரல் இரும்பொறை இறந்ததாகவும் குறிப்பிடுகிறர். (புறம். 229). வானத்தினின்று புகைக்கொடி வீழ்ந்தபோது, நாள்மீனது நிலையையும், கோள் மீனது நிலையையும் தெளிவாக எடுத்துக் காட்டுகிருர் வீழ்ந்தது எரிகொள்ளி அன்று. வீழ்ந்த வேகத்தை யும், ஒளிச் செழுமையையும், வீழ்ந்த பின் ஏற்பட்ட விளேவை யும் ஆராய்ந்து பார்க்கும் போது, தீமை விளேக்கும் தூமகேதுவே தோன்றியுள்ளது என்று முடிவுகட்டலாம். இவ்வாறு தூமம் தோன்றினுல், நாடு கெடும்; ஊர் கெடும்; உலகம் கெடும்; வாழ் வோர் கெடுவர்; ஆள்வோர் கெடுவர் (புறம். 43, 117, 395) என வரும் இலக்கிய வரிகள், தூமகேதுவின் தோற்றம் நாட்டுக்கும் அழிவை விளேக்கும் என்பதைச் சுட்டி செல்கின்றன. ஆடு கயல் தேள் தனுச் சிங்கத்து எழுமீன் விழுமேல் அரசு அழிவாம்’ என்ற சோதிட நூற் கருத்து இக்கருத்தை வலியுறுத்துகின்றது. தமிழ் நாட்டு இலக்கியங்கள் காட்டும் இச் செய்தியை, உலக வரலாற்றேடுகளும் உ றுதி செய்கின்றன. உலக வரலாற்றில் தூம கேது 2.0. “The comet is an infalliable sign of a very evil event. whenever eclipses of the sun or moon, or comets, or earthquakes, conversions of water into flood, and such like prodigies happen it has always been known that very soon after these miserable

  • 137
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/145&oldid=743264" இலிருந்து மீள்விக்கப்பட்டது