பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயம். குடும்பத்தைப் பற்றிக் கவலைப் படாது காதலே கதியாய் வாழ்ந்தது விலைமகளிர் சமுதாயம். முரண்பட்ட இவ்விரு மகளிர் சமுதாயமும் சிறிது திருத்தம் பெறவேண்டும் என்று கவிஞர் கருதியிருக்க வேண்டும். குடும்பக் கடமையையே மேற் கொண்டது குலமகளிர் சமுதாயம். காதற் கலேயையே மேற் கொண்டது விலே மகளிர் சமுதாயம். இவ்விரண்டையும் சமப்படுத்தக் கருதுகிருர் இளங்கோவடிகள் என்று தோன்று கிறது குடும்பக் கடமை மேற்கொண்ட மகளிர் சமுதாயத்திற்கு ஒரு சிறிது காதற் கலேயும் தேவை. காதற் கலேயை மேற் கொண்ட மகளிர் சமுதாயத்திற்குக் குடும்பக் கடமையும் தேவை. இதுதான் கவிஞர் கருத்து. கண்ணகி குடும்பக் கடமையில் வல்லவள் . ஆல்ை தன் கணவனைத் தன் பால் ஈர்த்து நிறுத்தும் காதற் கலேயும் அவளுக்கு வேண்டும். மாதவி காதற் கலேயில் வல்லவள் . ஆனல் அவள் தன் தலே வன் தன் னே ஐயுரு திருக்கும் பொருட்டுத் தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற் காக்கும் குடும்பக் கடமையு அவளுக்கு வேண்டும். நம்பியின் முரண் நங் கையர் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றில் மட்டுமே வல்லவர். இருவரும் அவரவர் க்குத் தேவையான மற்ருெரு பண்பையும் தேவையான அளவேனும் பெறவேண்டும் . இத் (' கவையை அவருக்கு நிறைவு செய்வார் யார்? கண்ணகிக்குக் காதற் கலே யையும், மாதவிக்குக் குடும்பக் கடமையையும் கற்பித்து நிறைவு செய்ய வேண்டியவன் கோவலனேயாவான். கண்ணகியுடன் கூடி அவளுக்குக் கா தற்க லே யை ஊட்ட முயல்கின் ருன் கோவலன். அத்துடன் நிற்காமல் தீராக் காதலின் திருமுகம் நோக்கிக் கண்ணகியைக் குறி யாக் கட்டுரையாலும் உலவாக் கட்டுரையாலும் பலபடப் பாராட்டி அவளே நாணமுறச் செய்யும் நாடக க் காதல் நிகழ்த் துகின் ருன். நாடகமகளாகிய மாதவியிடம் நிகழ்த் தவே ண் டிய நாடகக் கா கலக் குடும்ப நங்கை கண் ணகியிடம் பயனின்றி நிகழ்த்தித் கோல்வி கண்டு ஒதுங்குகின் ருன். 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/15&oldid=743269" இலிருந்து மீள்விக்கப்பட்டது