பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதவி தன் னே க் கோவலனுக்கே உரிமையாக் கி வாழ்ந்தாள், ஆயின் தன் கலேயை (ஆடல் பாடல்களே) ஏனே யோருக்கும் உரிமையாக் கியே வாழ விரும்பினுள் . தன் காதலியின் ஆடல் பாடலே மற்றவர் கண்டு அவளை அவாவும் நிலேயை எந்தத் தலைவனும் விரும்பான். கோவலனும் அதற்கு விலக் கல்லன். இந்திர விழாவில் அவள் தனது ஆடலால் மண் ணுலகத்தவரை மட்டுமன்று விண்ணுலகத்தார் நெஞ்சையும் கொள்ளே கொண்டாள். தன் காதலியைப் பிறர் விரும்பிப் பாராட்டும் நிலே யை விரும்பா கே வலன் அவள் பால் ஐயுற்று வருந்தினன். ஊடல் கொண் டான். கோவலனது உள்ள நிலே யை முன்னரே மாதவி உணர்ந்து திருந்தியிருக்க வேண்டும். உணர்ந்து தன் கலேயையும் அவனுக்க்ே உரிமையாக்கித் தகை சான்ற சொற்காக்கும் குடும்ப மகளாய் மாறியிருக்க வேண்டும். மாத வியின் துாய காதல் நெஞ் சை உணராது கோவலன் துன்புற்ருன் . தெளிந்தார் கண் ஐயுறவு அவனுக்குத் தீரா இடும்பை தந்தது . அவளுடன் ஊடினன் . மாசற்ற மனத்தின ளாகிய மாதவி அவன் ஊடற் காரணம் உணராது பண்டு போல் பழகினுள் . கண்ணகியிடம் கோவலன் இவ்வூடலே நிகழ்த் தி யிருப்பின் ஒருவேளை அவளுக்குக் காதல் உணர்வு தோன் றி யிருக்கக் கூடும். கண்ணகியிடம் நிகழ்த் த வேண்டி ய ஊடலே மாதவியிடம் நிகழ்த்திக் கோவலன் கண்டது தோல்வி யே. கோவலன் எவ்வளவுதான் கூடிப்பாராட்டியும் கண் ண கிபால் காதல் வாழ்வைக் காண முடியவில் லே, எ வ்வளவுதான் ஊடி யிகழ்ந்தும் மாதவிபால் அவன் குடும்ப வாழ் வைக் கான முடியவில்லை. குடும்ப வாழ்விலும் காதல் கலேயிலும் இரண்டிலும் தோய்ந்து வெற்றி கான முயன்ற கோவலன் ஒன்றிலும் முற்றறிவு பெ ருது இரண்டு ங் கெட்டா னு பி னு ன், இரண்டு எம். ஏ. படித்தவர் போல. ஈரிடத் தும் கோவலன் உற்ற தோல்வியே அவனது வாழ்வின் தோல் விக்குக் காரணமாகியது , அவனது வாழ்வின் தோல் வியே இளங்கோவடிகளின் சிலம்புக் காப்பியத் திற்கு வெற்றி நல்கியது. ~ முதற் காப்பியத் தின் முதல் முரண் தொடை இது என உணர்ந்து மகிழ்வோமா க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/16&oldid=743280" இலிருந்து மீள்விக்கப்பட்டது