பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆற்றின் பெருமை நன்கு புலப்படுகிறது. காவிரியைத் தாயாக வும், நிலத்தைக் குழந்தையாகவும் காட்டியது மிகச் சிறப்பாக உள்ளது. ஆக இதன் உட்கருத்தாகக் காவிரி சோனுட்டிற்குத் தாய் போன்று விளங்குகிருள் என்பது நன்கு கற்பனை செய்யப் பட்டுள்ளது. - இனி ஒர்ட்சுவர்த் கூறும் நினேவுக் கற்பனையைக் கானல் வரியில் வரும் பொழுது கண்டு ஆற்ருளாகிய தலைமகள் தோழி க்கு உரைக்கும் பகுதியில் காணலாம். - “புது மதிபுரைத்த முகத் தாய் போனுர்நாட்டு உளதாங் கொல் மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்த இம் மருள்மாலே” இங்கு என்றும் காணும் பொருள்களாக ஞாயிறும் திங்களும் உள்ளன. இதனைக் கற்பனைய ல் இயக்கும் பொழுது நினே வைத் தட்டி எழுப்புவதாய் உள்ளது. அதாவது, "நம்மை விட்டுப் போனவர் இருக்கும் நாட்டிலும் திங்களே உமிழ்ந்து கதிரவனே விழுங்கி வந்த இந்த மயக்கத் தினேயுடைய மாலேப்பொழுது உளதாங்கொல்லோ’ என்பது இதன் பொருளாகும். ஆக இதன் மூலம் ஒர்ட்ஸ் வர்த் கூறும் நினே வுக் கற்பனை யைக் காணலாம். அடுத்து ரிட்சர்ட் ஸ் அவர் களின் கற்பனைப் பிரிவுகளின் படி பார்ப்போம். மனக் கண்ணில் பொருளேக் காணுதல் என்பதில் கற்பனைகள் அனேத்துமே அடங்கும். ஆகவே அதனைத் தனியே காணும் நிலே தேவையன்று உவமை, உருவகம் முதலியவற்ருல் பொருள்களே உறவாக்கிக் காணுதல் என்பது ஆங்காங்கே சிலம்பு முழுதும் பெருகி நிற்றலேக் காணலாம். பிறருடைய மன நிலையை - இன்ப துன்பங்களே உணர்த்தல் என்ற பிரிவில் மங்கலவாழ்த்துப் பாடலில் கோவலனின் இன்ப நிலையையும், கண்ணகி தன் கால் சிலம்பை அவையில் உடைத்து வழக்கில் வென்றபோது தாழ்ந்த குடை யன்- தளர்ந்த செங்கோலன் பாண்டியன் உயிர்துறக்க அந் நிலே தாங்காது கணவனே இழந்தோர்க்குக் காட்டுவது இல்லென்று அம்மன்னனின் இனேயடி தொழுது வீழ்ந்த கோப் பெருந்தே வியின் துன் பநிலையினையும் காட்டலாம். இதற்காக ச் சான் றுகள் எண்ணிலடங்கா. வெவ்வேருக உள்ள பொருள்களே 157

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/165&oldid=743286" இலிருந்து மீள்விக்கப்பட்டது