பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மண்பக வீழ்ந்த கிழங்க கழ் குழியைச் சண்பகம் நிறைந்த தாது சேர் பொங்கர் பொய்யறைப் படுத்துப் போற்ரு மக்கட்குக் கையறு துன்பம் காட்டினும் காட்டும்” (68-71) என்று கூறுகிரு.ர். இதன் மூலம் புறத்தோற்றத்தை நம்பிச் செயலில் இறங்குதல் தவறு என்ற நீதியை உணர்த்து வதாய் உள்ளது. உலக இயல்பையும் இது கூறி நிற்கிறது. இறுதியாகத் தொல் காப்பியத்தில் கூறியபடி மனம் மங்கிய வழி ஒருவர் ஞாயிறு திங்களுடன் பேசுவது போல் அமையும் கற்பனே யைப் பார்க்கலாம். மறுவாழ்வு வாழ எண் ணிக் கோவலன் மதுரையிலே கண்ணகியின் காற்சிலம்பை விற்கும் போது வஞ்சகப் பொற் கொல்லல்ை கொலேயுண்டான். அது கேட்ட கண் ண கி பொங்கி எழுந் தாள் ; விழுந் தாள் ; செங்கண் சிவப்ப அழுதாள். நீதி தவறிய பாண்டியனைப் பழிக் குப் பழி வாங்குவதாய்க் கூறி ள்ை. பிறகு, காய் கதிர் ச் செல்வனே கள் வனே என் கணவன்’ என க் க திரவனே நோக்கிக் கேட்டாள். அதற்குப் பதிலாக ஒரு குரல் அ ைன் கள் வன் அல்லன் என்றும் எரி அவ்வூரை உண்ணும் என்றும் கூறியதாக வருகிறது. இங்குக் கண்ணகி ஞாயிற்றுடன் பேசுவதாக வருகிறது. மனங் கலங்கிய நிலேயில் இவ்வாறு அஃறினேப் பொருளிடத்தும் பேசுதல் இயல்பு. அக் கற்ப னே க்கு வழிகாட்டி நிற்கிறது தொல் காப்பியம் (சொல்.129).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/167&oldid=743288" இலிருந்து மீள்விக்கப்பட்டது