பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானேயின் கனவு மலைச் சாரலில் வேங்கை மலரத் தொடங்கிய காலம். புலியொடு பொருத யானே ஒன்று அயர்ந்து அதன் நிழலில் துஞ்சுகின்றது. யானேயின் துயில் திடீரெனக் கலேகின்றது. திடுமென எழுந்து தன் கோடுகளால் வேங்கை மரத்தைத் தாக்கி அதன் கிளேகளே முறிக் கின்றது. யானேயின் செயலுக்கு அது கண்ட கனவே காரணம். புலியோ டு பொருத யானையின் நெஞ் சில் புலியைத் தொஃலக்கவேண்டும் என்ற நினைவு வைரம் பாய்ந்து விட்டது. அந் நினே வு கன வுக்கு வித்திடுகிறது. கனவிலும் புலி தோன் றுகிறது. அதனை வென்று விட வேண்டும் என்ற துடிப்பு யானே யை எழச் செய்கின்றது. கண் விழித்த யானே தன் முன் மலர்ந்து நிற்கும் வேங்கை யைக் கண்டது. அதனே வேங்கை மரமென உணராது பாய்ந்துவிட்டது. யானே தன் கனவு மயக்கத் தால் இச் செயல் புரிந்தது, எனினும், வேங்கை புதிதாக மலர்ந்து நின்ற காட்சியும் காரணமாகின்றது. செயல் வேகம் தணிந்தபின் தெளிவு பெறுகின்றது. தன் அறியாமையை எண்ணி, அவ்வேங் கை மரத்தைக் காணும் போதெல்லாம் நாணி இறைஞ்சுகின்றது. இக் கனவு மயக் கத்துள் இயைத்துத் தலே வியின் உளக் கொந் தளிப்பை உள்ளுறை வாயிலாக உறைக்கின் ருள் தோழி (கலி 49:1-9). யானே தலைவியைச் சுட்டி நிற்கின்றது. புதிதாக மலர்ந்த வேங்கை தோழியைச் சுட்டுகின்றது. யானைக்குப் புலி ப ைக. தலே விக்கு ஊரார் அலர் பகையாகின்றது. உளம் மயங்கிய தலே விக்கு தோழியிடமும் சினம் பொங்குகின்றது. தன் கனவு வாழ்க்கைக்குக் காரணமாக நின்ற அவளேயும துன்பம் வருத்தும் போது தாக்கி மொழிந்து விடுகின் ருள். தெளிவு பிறந்தபோது தன் உயிர் பகுத்தன் ன நட்பின் தோழியைக் குறை கூறிய மைக்கு வருந் தி நாணித் தலை குனிகின்ருள். தோழி, தலேவ னுக்குத் தலைவியின் நிலையைப் புலப்படுத்த இப்பாடல் துணை புரிகின்றது. கவரிமான் கனவு கனவு உளவேட்கையின் விளேவு என்பதை நிலைநாட்ட இம்மா னின் கனவு துணை நிற்கின்றது. பதிற்றுப்பத்தில் கவரி 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/171&oldid=743293" இலிருந்து மீள்விக்கப்பட்டது