பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மான் நரந்தம் புல்லேக் கனவுவதாகக் காட்டுகிருர் புலவர். கவரி மானின் கனவு இமயத்தின் புகழுக்கு ஏற்றம் கூட்டுகிறது . மலேப்பகுதிகளில் கொடிய விலங்குகள் வாழ இயலும். இமயத் திலோ கவரிமான்கள் அச்சமின்றித் துயல்கின்றன. அவற்றின் கனவில் அவை, மிக விரும்பி உண்ணும் நரந்தம் புல்லும் தெள்ளிய அருவிநீரும் காட்சியளிக்கின்றன. இக் கவரியின் நரந்தக் கனவு சோனின் ஆட்சிச் சிறப்பைக் குறிப்பாக விளக்கி நிற்பதாகக் கொள்ளலாம். அவன் நாட்டில் வலியார், மெலி யாரை வாட்டும் வன்கண் மை இல்லே. எளிய குடி யினரும், மான் போன்று தாம் விழைந்த வாழ்வு வாழும் செங்கோல் தன் மை உண்டு. (பதிற். 11:21-23). இச்சங்க இலக்கிய உயிரினக் கனவுகள் பிராய்டின் கொள் கையை வலியுறுத்தத் துணைபுரிவதோடு, உவமை, உள்ளுறை குறிப்புப் பொருள் போன்ற இலக்கிய உத்திகளாகவும் பயன்படு கின்றன என்பது வெளிப்படை. 164

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/172&oldid=743294" இலிருந்து மீள்விக்கப்பட்டது