பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(4), அன் ஆன போல இனிய கூறியும் (5) யாந் நயந்தெடுத்த ஆய்நலம் (6) என வரும் தோழி, தலேவி கூற்றுக்களும் இதனேயே விளக்கும். 1.3. ஈன்று புறந்தந்த தன் னே மறந்தும் துறந்தும் சென்ற பின்னும், பந்து சிறிது எறியினும் இன் துணை ஆயமொடு கழங் காடினும் உயங்கின்று மெய் என்று தழு விக்கொள்ளும் (7). அவள் மென்மையையும், கோதை மயங்கினும் குறுத்தொடி நெகிழினும் காசுமுறை திரியினும் கலுழும் (8). அவள் பேதைமையையும் இல் எழுவயலே ஈற்று ஆ தின் றெனப் பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி வயிறு அலைத்து அழும் (9). அவள் இளமையையும் நிஜனந்தே; கடத்தற்கரிய கானம் கடக்க வல்ல கொல்லோ அவள் மெல்லடி (10) என்றும் புறவின் புலம்புகொள் தெள் விளி அமர்ப் பனள் நோக்கி நலியுங் கொல் (11), அறையுந் தண்ணுமை கேட்குநள் கொல் (12) வெய்துயிர்த்துப் பிறை துதல் பெயர்ப்ப உண்டனள்கொல் (13) என்றும் வருந்துகிருள். 1.4. வருந்துவதோடு திற்காமல், எம்.வெங் காமம் இயை வதாயின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் அறிந்த மாக் கட்கு ஆகுக தில்ல (14), புள்ளும் அறியாப் பல்பழம் பழனி மடமான் அறியாத் தடநீர் நிலைஇ (15) சுரம் நனி இனியவாகுக (16) என்றெல்லாம் வேண்டிக்கொள்கிருள். 1.5. புதுவது புனைந்து தமர் மணன் அயர்வதிலும் உடன் போக்கில் விழைவுகொண்டு மகள் சென்ற போதிலும் சிலம்பு கழி இய செல்வம் பிறருணக் கழிந்ததற்காகவும் (17) மகளே மனக் கோலத்தில் கான இயலாத தற்காகவும் (18) ஏங்கி, நும்மனே ச் சிலம்பு கழி இ யயரினும் எம்மனே வதுவை நன் மனங் கழிக (19) என்றும், அதுவும் இல்லை எனில் மனம் முடிந்த பின்னரேனும் வருவாராக என்றும் அன்பின் மிகுதியால் எந் நிலேயிலும் அவர் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின் ருள். 16. இத்தனைக்கும் மேலாக மனம் விரும்பியவனுடன் மகள் சென்றதே அறத்தின் பாற்பட்டது எனும் கொள்கை உடைய வளாகவும் இருக்கிருள். இளையோள் வழுவிலள் (20) அறநெறி 166

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/174&oldid=743296" இலிருந்து மீள்விக்கப்பட்டது