பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள் கூறுவதிலும் குறளுக் கொவ்வாத சில கருத்துக்கள் பரிமேலழகர் உரையில் இவ்வாறு சில விடங்களிற் காணப் படுகின்றன. பிறர் உரையை இலக்கணம் காட்டி மறுக் குமிடங் களும் ஒரோவழிப் பொருத்தமாகப்படவில்லே. இனி அவற்றுட் சில காண்போம். நாளென ஒன்றுபோற் காட்டி யுயிரீரும் வாள துனர் வார்ப் பெறின் (334) நாளென்று அறுக் கப்படுவதொரு கால வரையறை போலத் தன் சீனக் காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர் அஃதுணர்வாரைப் பெறின் என்று இக் குறட் குப் பரிமேலழகர் உரை கூறுவர். ஈரும் வா ளது உயிர் என க் கொண்டு உயிரை எழுவாயாக வும் வாளது என்பதை வினே ப் பயனிலையாகவும் கொள்வர் பரிமேலழகர். ஆனல் மனக் குடவர் நாளென்பது இன்பந் தருவதொன்று போலக் காட்டி உயிரை ஈர்வதொரு வாளாம், அதனே அறிவாரைப் பெறின் என்றவாறு என உரை கூறியுள்ளார். மனக் குடவர் நாளென்பது எனப் பாடங் கொள் வர் என்று வ. உ. சிதம்பரம்பிள் ளே தம் அறத்துப்பால் பதிப்பில் குறித்துள்ளார். மனக் குட வர் உரைக்கு நாள் என்பது எழுவாய் , வாள் என்பது பெயர்ப்பயனிலே. நாள் என்பது உணர்வாரைப் பெறின் உயிரீரும் வாள் என் னும் மணக் குடவர் உரைப்போக்கு குறள் நடைக்கு இயல்பாக வம், சிறப்பாகவும் அமைந்துள்ளது. இவர் உரையைத்தான் பரிமேலழகர் என’ என்பது பெயரன்றி இடைச் சொல்லாகலானும் ஒன்றுபோற் காட்டி என்பதற்கு ஒரு பொருட் சிறப்பின் மையாலும் அது’ என்பது குற்றியலுகரம் அன் மையாலும் அஃது உரையன் மையறிக எனக் கூறி மறுத்துள்ளார் என் ம. தோன் றுகிறது. நாளென்பது ” என்றே பாடமிருத்தலின் நாளென என்று இடைச் சொல்லாகக் கொண்டு மறுக்கும் மறுப்பு பொருந்தாது போகின்றது. அல்வழி யில் அது - உணர்வர் = அஃதுணர்வார் என்று வருதல் வேண்டும். - 'முன்னுயிர் வருமிடத்து ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும் அல்வழியான ’ (424) 186

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/194&oldid=743318" இலிருந்து மீள்விக்கப்பட்டது