பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையாசிரியர்கள் கருத்திலுள்ள முரண்பாட்டிற்கு விடை காண்பதற்கு உதவியாக "லீலாதிலகம்” சில இலக்கணக் கருத்துக் களைத் தருகின்றது. மலே நாட்டுத் தமிழில் 14-ம் நூற்ருண்டளவில் ol; , грт ஈறெல்லாம் அ கர ஈருகியதாலும், ஐயுருபு கரமாகத் திரிந்ததாலும், ஏகார இறுதி பெரிதும் எகர மாக எழுதப்பட்டதாலும், மொழி பிறுதியில் ஐகாரத்தை விலக்கி விடுவதோடு, கரம் மெய்யொடு இறுதியில் நிற்கும் என்ற கருக்கை அமைக்கும் முறையில், ஐ, ஒ, ஒள ஆகியன மொழி யிறுதியில் வாரா என்ற விதிவகுக்கின்றது லீலா திலகம். மலேயாள மொழியின் தனித் தன்மைகளில் ஒரு சிறந்த பகுதி பேச் சுத் தமிழை ஒத்தது என்பதை இங்கு முக்கியமாகக் கருத வேண்டும். பெலத்தினலே, கெடாதே என்ற வடிவங்கள் பெலத்தினுலெ கெடா தெ, என்று இராம சரிதத்திலும் லீலாதிலகத்திலும் அமைந்து விடுகின்றன. இன்றைய மலேயாள மொழியில் எகரத்தில் இனும் சொற்கள் அதிகம் இறுதி ஏகாரத் தைப் பேச்சு மொழியில் எகரமாக ஒலித்தல் தொல்காப்பியர் காலத்திலேயே அமைந்திருக்க வேண்டும். தொல்காப்பியரே ' கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே ' .' ' கூற்ற அவண் இன் மை மாற்றுறத் தோன்றும் ’’’ முதலிய நூற்பாக் களில் கூற்ற் என்பதைப் பேச்சு என்ற பொரு ளில் கையாண்டிருக்கிருர். எனவே பேச்சுத் தமிழில் ஈற்று ஏகாரம் எகரமாகவும் ஒலிக்கப்பட்டது என்பது இந் நூற்பாவால் தொல் காப்பியம் உணர்த்தும் பொருள் எனக் கருதுவது பொருந்தும் பேச்சு மொழியில் சில சந்தர்ப்பங்களில் இறுதி ஒகாரம் ஒகரமாக ஒலிக்கப்படினும், போ, அய்யோ முதலிய சொற்களில் இறுதியை குறுகிய ஒகரமாக எழுதல் கூடாது' என்று லீலா திலகம் குறிப்பிடுவது போன்று தொல்காப்பியமும், இந் நூற்பாவால், பேச்சு மொழியில் ஏகார ஈறு எ காரமாக ஒலிக்கப் படி ஆறும், இலக்கிய மொழியில் எகரம் மெய்யொடு மொழியிறுதியில் வருவதில்லை என விதி வகுக்கின்றது. ஆகவே பேச்சு வழக்கில் கார இறுதி எகரமாக ஒலிப்பதை இந் நூற்பா குறிப்பிடுகின்றது என க் கொள்வது பொருத்தமாவதோடு, தொல்காப்பியம் 2O7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/215&oldid=743341" இலிருந்து மீள்விக்கப்பட்டது