பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போட்டீரே" - தாமரை சனவரி 1971 இதழில் ஆ. மாதவன் எழுதிய சிறுகதை; 3. சமுதாய ஒற்றுமை குறைந்து வட்டார மொழிகளுக்குச் செல்வாக்கு சேர்க்கும் நிலே ஏற்படும்; 4. எழுத்து மொழியைக் கட்டிக் காத்து வரும் இலக்கணம் பொருளற்றதாகி மொழி கட்டுப்பாடற்று மாறி வரும்; 5. அவ்வக் கால இலக்கியங்களாகத் தள்ளப்படலாம்; 6. .ெ ரது மொழியின் சிறப்புக் குறைந்தால், மொழிகளுக்கிடையே மொழியாக்கம் பெருஞ்சிக்கலாய் எழுகிறது. இவ்வாறு பேச்சுமொழி இலக்கியங்களால், நன் மைகளும் உள்ளன, தீமைகளும் உன் ளன. இரண்டையும் நிறுத்துப் பார்த்து’ நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டியவர்களாக இருக் கிருேம் . ஆராய்ந்து பார்க்கும்பொழுது, சிறுகதைகள் புதினங்கள் இத்துறையில் மட்டும் தான் நாம் பேச்சு மொழியை மிகுதியாகச் சந்திக் கிருேம். இலக்கியத்தில் கவிதைத் துறையில் இது பெரும் பாலும் நுழையவில்லே. மற்றபடி கல்வித் துறை முழுவதிலும் (Stan dard Language) எனப்படும் பொதுத் தமிழ் தான் கையாளப்பட்டு வருகிறது. அதிலும் கூட வட்டாரத்திற்கு வட்டாரம் அவரவர் பேச்சுத் தமிழில் (dialect) பாடங்களே, கட்டுரைகளே எழுதுவது நலம் என்று ஆல்ை அந்த அளவுக்குப் போனல், மேற்சொன்ன சமுதாயப்பிளவுகள் வந்து விடும். மொழி திசைமாறித் தடுமாறும். ஆகவே கல்வித்துறைகள் அனேத்தும் இலக்கியத் தமிழியில்தான் இயங்கவேண்டும் என்ற முடிவுக்கு வருவோம். இலக்கியத்திலும், கவிதைத் துறை ஒரு சமுதாயச் சிக் கலே எழுப்பு கிற அளவுக்கு இன்று சிறப்படையவில்லே. ஆகவே அ ைதயும் நீக்கில்ை க ைதகளே எஞ்சி நிற்கின்றன. வாழ்க்கை யை வடித்துக் காட்டும் இந்த வகை இலக்கியத்தில் உண்மை ஒளிரவேண்டும், என்பது மிகவும் தேவை! உண்மை, அது எவ்வளவு கடுமையாக ஒலித்தாலும், கொடுமையாகத் தோன்றி லுைம், அது உண்மையென் பதற்காகவே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நமக்கு வரவேண்டும். எல்லா இலக்கியங்களேயும் பேச்சுத்தமிழில்தான் எழுத வேண்டும் என்பது இக் கட்டுரையின் நோக்கமன்று. இலக்கியத் 214

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/222&oldid=743349" இலிருந்து மீள்விக்கப்பட்டது