பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பர் தேவாரத்தில் அரிய சில சொல் வடிவங்கள் திரு. சொ. சிங்காரவேலன் அ. வ. அ. கல்லூரி, மாயூரம் 0.1. “இலக்கியம் என்பது வாழ்வின் ஒருவகை விளக்கமே; அது சொல்லின் வழியாக இனிது விளங்குகின்றது” என்பர். அத்துடன் ஒர் ஆசிரியனின் நடையினே ஆழ்ந்து ஊர் தற்கு அவனுடைய சொல்லாட்சியினே அறிதல் பெரிதும் வேண்டத் தக்கது என்பது இலக்கிய ஆராய்ச்சியாளரது முடிவும் ஆகும். "இலக்கியம் விளேக்கும் இனிய உணர்வுகள் ஒரு மனத்தினின்றும் பிறிதொரு மனத்திற்குச் சொற்கள் வழியாகவே செல்லுதலால் அவற்றைத் தனித்து ஆராயும் ஆராய்ச்சி நடை ஆராய்ச்சியின் இன்றியமையாத பகுதிகளுள் ஒன்ரும்’ என்பர் எடித் ரிக்கர் என்னும் அறிஞர். 0.2. இத்தகு சிறப்புடைய சொல் ஆராய்ச்சி சில இன்றி யமையாக் கூறுகளே உடையது. சொல்லின் அளவு, சொல்லின் நிலை, சொற்கள் தொடர்ந்து நிற்கும் தொடர்நி ல, சொற் கோவைப் பரப்பு தொடராக்கம் ஆகிய கூறு கள் இதன் பால் அடங்குவன. கவிஞனது சொற்கோவைப் பரப் பில் நம் சிந்த னே யைத் துண்டும் நிலேகளா கப் பலவற்றைக் கொள்ளலா ம். அவற்றைக் கூர்ந்து நோக்குங்கால், அரிய சொற்கள் அரும் பொருள்களிற் கையாளப்பெற்ற சொற்கள் படைக் கப்பட்ட சொற்கள் இணையற்ற பொருளில் ஆளப்பட்ட சொற்கள் அயல் மொழிகளினின்று கடன் வாங்கப்பட்ட சொற்கள் இலக்கியங் 216

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/224&oldid=743351" இலிருந்து மீள்விக்கப்பட்டது