பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1:7; "மாட்டேன் என்ற எதிர்மறை வினே அடிகளார் திரு வாக்கிற்பொருளில் ஒரு மாற்றத்துடன் விளக்கக் காண் கிருேம். "செய்யமாட்டேன், ஒடமாட்டேன்’, பாடமாட்டேன், என்ற தொடர்களுக்கு, செய்ய இயலாதவன் ஆனேன்’, ‘ஓடுதல் இயலாதவன் ஆனேன், பாடுதல் இயலாதவன் ஆனேன்’ என்று பொருள் கொள்ளுமாறு அடிகளார் பாநெறி அறிவுறுத்துகின்றது. "நான் செய்யேன்", "ஒடேன்’, பாடேன்’ என்று பொருள் கொள்ளு தல் அடிகள் பாநெறிக்குத் தக்கதன் று. அடிகளாற் திருவாக்கில்’ 'மாட்டேன்’ என வரும் இடங்கள் அனைத்தும் இவ்வாறு பொருள் செய்யத் துரண்டுகின்றன. 'மாட்டுதல் என்ற வி&ன யடியாகப் பிறந்த பெயரெச் சம் 'மாட்டா என்பதாகும்; இது 8 இடங்களில் வருகின்றது. 'மாட்டேன்’ என்ற தன்மை ஒருமை வினே வடிவம் 60 இடங் களிலும் மாட்டீர்’ என்ற முன்னிலேப்பன்மை வடிவம் 2 இடங் களிலும், மாட்டான்’ ‘மாட்டா தான் என்ற வினேயாலணையும் பெயர் வடிவங்களில் முன் னது 4 இடங்களிலும், பின்னது 1 இடத் திலும் மாட்டாதார்’, ‘மாட்டார்’ என்ற படர்க் கைப் பன் மை வினே யாலனேயும் பெயர் வடிவங்களில் 1 இடத்திலும், பின் னது 5 இடங்களிலும் வருகின்றன. இவை யனைத்தும் இயலாமைப் பொரு ளிலே வழங்குகின்றன என்பதும், நேர் எதிர்மறைப்பொருளில் வழங்கப் பெறவில்லே என்பதும் அறியத் தகுந்தன. “காணமாட்டா”, 'பாடமாட்டேன்”, உணரமாட்டீர்’ மாட்டா தான்”, அறியமாட்டான் ’ ’, கா னமாட்டார். ’ 'மாட்டா தார்’ என வரும் இடங்கள் காணத் தக்கன. பெரும் பாலும், மாட்டுதல் என்ற வினேப்பகுதியின் அடியாகப் பிறந்த இவ் வடிவங்கள், செயவென் எச்சங்கட்க்குப்பின்னர் வந்து விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக் கது. 220

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/228&oldid=743355" இலிருந்து மீள்விக்கப்பட்டது