பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறும் முன், கூறுங் கால், கூறும் வழி எனப் பெயரெச் சங்களின் பின்னல் வருவதும் (பெயர்களைப் போன்று), செய்து, செய்யூ போன்றவை இந் நிலையில் மாறுபட்டிருப்பதும் இவற்றிடையே காணப்படும் வேறுபாடாம். மேலும் முதல் நூற்பாவில் கூறப்படும் விஜனயெச்சங்கள் வினைச் சொற்களிலிருந்து உருவ ன வை. இவையனைத்தும் செய், வா, போ போன்ற வினே ச் சொற்களி லிருந்து உருவாகியிருக்க பின், முன், கால் போன்றவை இ ைடச் சொற்களாகவே உள்ளன. இத னு ல் தான் வினேயெச்ச வாய்பாடுகளைக் கூறப் போந்த தொல்காப்பியர் இவற்றைத் தனித்தனியே இரு நூற்பாக்களில் கூறினர் போலும்! இத்தகைய வினையெச்சங்களுள் செய்யியர், செய்யிய, செய, செயற்கு எனும் நான் கையும் ஒரு பிரிவில் அடக்குவர் இலக்கண அறிஞர்கள். இவையனைத்தும் , செய்யியர் வந்தான், செய்யிய வந்தான், செய வந்தான், செயற்கு வந்தான் போன்ற வாக்கியங் களில் வரும்போது ஒரே பொருளேத் தந்து நிற்பது இதற்குக் காரணமாகும். இவற்றுள் 'செயற்கு’ என பது நான் க இருபு ஏற்று நிற்கும் தொழிற்பெயர் எனக் கருதுவா பலர். இதகு ல் தான நன்னூலார் செய்து செய்பு செய்யாச் செய்யூச் செய்தெனச் செயச் செயின் செய்யிய செய்யியர் வான் பான் பாக்கின வினேயெச்சம் பிற ஐந்தொன் ருறுமுக் காலமும் முறை தரும். என்னும் நூற்பாவில் இதனைக் குறிப்பிடவில்லே போலும் மேலும் தொல் காப்பியர் குறிப்பிடாத வான்', 'பான்’, பாக்கு’ என்ற வாய்பாடுகளே நன்னூல் குறிப்பிட்டுள்ள மை இவண் நினைவு கூரத்தக்கது. இந் நிலையில் திருக்குறளில் காணப்படும் சொற்களே அடிப் படையாகக் கொண்டு செயவென் எச்சத்தின் (Infinitive) வாய் பாடுகள், அவை காட்டும் பல்வேறு பொருள்கள், இவ்வெச்சத் திற்கும் பிற இலக் கணக் கூறுகளுக்கும் (குறிப்பாக தொழிற் பெயர்க்கும்) இடையே காணப்படும் தொடர்புகள் போன்ற வற்றைக் காணுதலே இக் கட்டுரையின் நோக்கம். 222

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/230&oldid=743358" இலிருந்து மீள்விக்கப்பட்டது