பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலில், செய’ செய்யிய', 'செய்பாக்கு என்ற மூன்று வாய்பாடுகளில் இவ்வினையெச்சம் காணப்படினும் செய’ எனும் வாய்பாடே மிகுதியாக உள்ளது. - பாக்கு : காப்பாக்கறிந்து (1127) வேபாக்கறிந்து (1128) கரப் பாக் கறிவல் (1129) என் பாக்கு (1312) படுபாக்கு ( 136, 168) ==== இய I தினிய (1290) காட்டிய (1313) ான வரும் இடங்களேத் தவிரப் பிற இடங்க ளனைத்தும் செய’ வென் வாய்பாட்டினேயே கொண்டுள்ளமை இவ்வாய்பாட்டின் முக்கியத் துவத்தையும், அதன் பொருள் காட்டும் தன்மையை யும் விளக்குவதாக அமையும். மொழிகளில் காணப்படும் இலக் கணக் கூறுகளின் தன்மையை நன் குக் காணவேண்டின் அதன் அமைப்பையும் (சொல்லியல் அடிப்படையிலும்), அது வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்தப் படுகின்றன (தொடரியல் அடிப்படையிலும்) என் பதையும் ஆராய்தல் வேண்டும். சொல்லியல் அடிப்படையில் மட்டும் ஆராயின் இலக்கணக் கூறுகளின் முழுத்தன்மையும் விளங்குவது இல்லை. எளிமையாகக் காணப்படும் சில இலக் கணக் கூறுகளைத் தொடரியல் அடிப்படையில் காணும்போது அவற்றில் சிக்கல் நிறைந்துள்ளமை தெரியவரும். எடுத்துக் காட்டாக செய வென் எச்சம் மிக எளிமையான அமைப்பைக் கொண்டுள்ளது. வினையுடன் அகரத்தையும் கொண்டு நிற்கும் இவ்வெச்சம் வாக்கியங்களில் வரும்போது பிற பல்வேறு இலக் கணக் கூறுகளுடன் வைத்து எண்ணத்தக்க நிலையில் வரக் காண்கிருேம். எடுத்துக் காட்டாக வர என்ற சொல் "வருதல்”, 'வருதற்கு வருவதை’, ‘வந்த உடன்’ போன்ற பல பொருள் தந்து நிற்கக் காணலாம். அவன் வர வேண்டும்; அவன் வருதல் வேண்டும். அவன் வரச் சென் ருன் : அவன் வருவதற்குச் சென்ருன். அவன் வரக் கண்டேன்: அவன் வருவதைக் கண்டேன் 223

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/231&oldid=743359" இலிருந்து மீள்விக்கப்பட்டது