பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் வர நான் சென்றேன்: அவன் வந்த உடன் நான் சென்றேன். இந் நிலேயைப் பண்டைய இலக்கண ஆசிரியர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தொல் காப்பியத்திற்கு a- Gכס Dת எழுதிய நச்சிகுர்க்கினியர் 'மழை பெய்யக் குளம் நிறைந்தது”. எனக் காரணப் பொருளாயும், "குளம் நிறைய மழை பெய்தது. எனக் காரியப் பொருளாயும் வரும்”. என்பன போன்று கூறு வதும் , மு. வ. போன் ருேர் செயவென் எ ச் சப் பொருள்களாய் சில குறித்துச் செல்வதும் கவனித்தற் பாலன 'பெய் ய’ என்னும் சொல் பெய்ததால்’ என்றும் நிறைய என்னும் சொல் நிறை வதற்காக’ என்னும் பொருள் தருதல் காண்க. உலகமறையாம் திருக் குறளில் வரும் செயவென் எச்சமும் இத்தகைய பல பொருள்களைத் தந்து நிற்றல் காணலாம் 1. தொழிற்பெயர் செயதென் எச்சம் தொழிற் பெயரிலிருந்து உருவானது எனக் கருதுவர் பலர். தொழிற் பெயர் வரும் இடங்களில் எல்லாம் செயவென் எச்சமிட்டுக் கூறுதல் இயலாததாயினும் சில இடங் களில் இவ்விரு இலக் கணக் கூறுகளும் ஒன்ருேடொன்று பொருந்தி வருதல் காணலாம். - போர்த்துள்ள வேண்டா பிற (357) இது என வேண்டா (37) அலர் நாண ஒல்வதோ (1149) என வரும் அடிகளில் காணப்படும் உள்ள, என, நாண என்ற சொற்கள் உள்ளல், எனல், நாணல் என்றும் பொருளேத் தந்து நிற்றல் இவ்விரு இலக்கணக் கூறுகளிடையே காணப்படும் தொடர் பினே க் காட்டும், மேலும், அடல் வேண்டும் (343) விடல் வேண்டும் (343) அடல் வேண்டா (206) 224

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/232&oldid=743360" இலிருந்து மீள்விக்கப்பட்டது