பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் எனக் குறியிடவேண்டுதலின் அதன் பின் கூறப்பட்டது.”* சொல்லிலக்கண ஆராய்ச்சி தொடர் மொழியிலிருந்து தொடங்க வேண்டும் என்ற கொள் கை யர் தெய்வச் சிலே பார் என்பது இதனுல் விளங்கும். இன்றைய மொழியியலாருள் ஒரு பிரிவினர் இக்கொள்கையர் என்பது ஒத்துணர வேண்டிய செய்தி யாகும். இக் கொள்கை காரணமாகவே, கிளவியாக்கம்’ என்ற இயல் தொடர்மொழி இலக்கணம் கூறும் இயல் என்று தெளிவுற மொழி கிறார். இவ்வியல் அல்வழித் தொடர்களைப் பற்றிப் பேசுவதாக அவர் எழுதுவார். ஒன்றிரண்டு நூற்பாக்களேத் தவிர பிற எல்லாம் அவர் கருத்தை அரண் செய்யக் காணலாம். தற்கால அறிஞர் பலரும் இவர் கருத்தை ஆதரிக்கின்றனர். கிள வியாக்கம்’ என்ற தொகையைக் கீழ்க் கண் டவாறு விளக்குகிருர் - இவ்வதி காரத்துக் கூறப்பட்ட ஒன்பது ஒத்தினுள்ளும் முதற் கண் ண து கிளவியாக்கம். அது கிளவியதாக்கம் என விரியும். அதற்குப் பொருள் சொல்லினது தொடர்ச்சி என்றவாறு. சொற்கள் ஒன்ருே டொன்று தொடர்ந்து பொருண் மேலாகு நிலைமையைக் கிளவி யாக்கம் என் ருர் .” சொல்லினது தொடர்ச்சியாகிய முற்றத் தொடர்களேயும் (Sentences) சொற்ருெகைகளேயும் (Phrases) இவ்வியல் ஆய்கிறது என்ற இவரது கருத்துத் தெளிவு பிற உரை யாசிரியர்கள் விளக்கத்தில் கிடைக் கவில்லே . தமிழ்ச் சொற்களின் தினே, பால் பாகுபாடு பொருளே (semantics) அடிப்படையாக க் கொண்டதெனக் கருதுவாருளர்." ஆனல் தெய்வச்சிலே யார் அப்பாகுபாடு மொழியின் அமைப்பை (structure) அல்லது உருவத்தை (Form) அடிப்படையாகக் கொண்டது என அறிவியல் வழியில் விளக்குகிறர்." இது பற்றிய விரிவும் விளக்கமும் பிறிதோரிடத்தில் பேசப் பட்டுள்ளன. தமிழ்த் தொடர் மொழி இலக்கண த்தில் சிறப்பிடம் வகிக்கும் “இயைபு'க் (concord) கொள் கை யை இவர் கையாண்டு இவ்விளக்கத்தை அளிக்கிருர் 'அலிப்பன் மை மகடூஉ அறிசொல்லான் கூறப்படுதல் எவ்வாறு என்பது விளங்க வில்லே. == பாலறி கிளவிகள் பற்றிய நூற்பா ஒன்றில் தமிழ்ச் சொல்ல மைப்பு, வாக்கிய அமைப்பு இவற்றை மனங்கொண்டு சிறப் பான உரை எழுது கிறார். கிளவி. நூ. 9. உரை காண்க." 230

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/238&oldid=743366" இலிருந்து மீள்விக்கப்பட்டது