பக்கம்:ஆய்வுக் கோவை.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க்காப்பியங்களில் அவல வீரர்கள் டாக்டர் தா. ஏ. ஞானமூர்த்தி பூ. சா. கோ. கலேக்கல்லூரி, கோவை --- காப்பியமாவது மிகப் பழங்காலத்திலிருந்தே தமிழில் நிலவி வரும் ஒரு பேரிலக்கியமாகும். ஒரு காப்பியம் சிறப்பாக அமை வதற்கு இன்றியமையாதனவாக அமைபவை மூன்று. அவை யாவன : (1) és 6to 5 (story) (2) Lurš stig räts 6ir (characters) (3) [flop & flasgir (incidents). காப்பியத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் கதை ஒரு பழங் கதையாக இருத்தல் வேண்டும்; தஃப்முறை தலைமுறையாகச் செவி வழியாக வழங்கப்பட்டு வரும் கதையாக இருத்தல் வேண்டும்; ஒரு நாட்டில் பழங்காலமாக வழங்கிவரும் கதை யிலே தான் அந்நாட்டின் பண்பாடு நாகரிகம் முதலியவை பொதிந்திருக்கும்; இதல்ை அக் கதையின் மதிப்பு மேலிடுகிறது. அதைப் பல முறை கேட்பினும் அது தெவிட்டுவதில்லை. திடீரென ஒரு கவிஞனின் கற்பனையில் எழும் கதை காப்பியத் திற்கு ஒவ்வாது; அது தற்காலப் புதினங்களுக்குப் பொருந்துவ தாகும்; காப்பியத்திற்குப் பொருந்தாது. அடுத்துக் காப்பியத்திற்குச் சிறப்பை நல்குபவை பாத்திரங் களாகும். ஒரு காப்பியத்தில் பல பாத்திரங்கள் அமைய வேண்டும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாத்திரமாக அமைதல் வேண்டும்; எவ்வளவுக் கெவ்வளவு பாத்திரங்கள் ஒன்றுக் கொன்று வேறுபடுகின்றனவோ அவ்வள்வுக்கவ்வளவு பாத்திரம் சுவைக்கும். கம்ப ராமாயணத்தில் பல பாத்திரங்கர் இருப்பினும், ஒன்று போல் மற்றென்றைக் காணமுடியாது. o ராமாயணம் சுவைப்பதற்கு இது ஒரு சிறந்த காரணமாகும். 300

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆய்வுக்_கோவை.pdf/308&oldid=743444" இலிருந்து மீள்விக்கப்பட்டது